ஆச்சர்ய ஒற்றுமைகள்
இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார தேர்வு செய்யப்பட்டு 9வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். இதுவரை இலங்கையில் வாயால் வடை சுட்டுக்கொண்டிருந்த அநுரகுமார, குருட்டாம்போக்கில் தேர்வாகி விட்டார். திருட்டு கருணாநிதி குடும்பத்தினை சீமான் எதிர்ப்பது போன்று திருட்டு மஹிந்த குடும்பத்தினரை எதிர்த்து பெரும் புரட்சியை ஏற்படுத்தி அதில் வென்றுள்ளார் அனுர குமார திஸாநாயக்க. ஆனால், இவரால் தாக்குப்பிடிக்க முடியாது என்று இலங்கை தமிழர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
குமரன் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘’இலங்கை அரசியல் வரலாற்றில் சந்திரிகா அம்மையார் மற்றும் ரணில் விக்ரமசிங்க இந்த இரு தலைவர்கள் மாத்திரமே பொருளாதார ரீதியான அரசியலை புரிந்தவர்களாகவும் அதில் திறமை மிக்கவர்களாகவும் இருந்து வந்தார்கள். அநுரகுமாரவினால் இவர்களின் இடத்தை நிரப்ப முடியுமா என்பது கேள்விக்குட்பட்டது. வரும் காலங்கள் இதற்கான பதிலைச் சொல்லும். இலங்கையில் பொருளாதார நிபுணர்கள் என்று கூறக்கூடியவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இருக்கின்றனர் அவர்களில் பொருளாதார ரீதியான அரசியலை நன்கு அறிந்தவர்கள் இருக்கவில்லை. அமெரிக்க டாலர் இதுதான் அநுர குமார திஸாநாயக்கவின் முதல் சவாலாக இருக்கப் போகின்ற விடயம்.
மஹிந்தவின் குடும்ப ஆட்சியில் 150 ரூபாய் இருந்த ஒரு அமெரிக்க டாலர் திடீரென சில நாட்களிலேயே 380 ரூபாயை தொட்டது. இதனால் இலங்கை வரலாற்றில் பாரிய அசௌகரியத்தை மக்கள் எதிர்கொண்டார்கள். ஏனெனில் இலங்கை என்பது இறக்குமதி செய்யும் நாடாகத்தான் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. டாலர் தொடர்பான பொருளாதார நிபுணத்துவ அரசியல் அறிவு அற்றவர்களால் நாட்டை வழிநடத்த முடியாது. இதுதான் மஹிந்தவின் குடும்பத்தினரின் வீழ்ச்சிக்கு காரணமாகும்.
அநுரகுமார ஒருபோதும் சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக செயல்படவில்லை. மஹிந்த குடும்பத்தினருக்கு எதிராகவும் அவர்களின் ஆட்களுக்கு எதிராகவும் தீவிரமான அரசியல் முன்னெடுப்புகளில் ஈடுபடவில்லை. ஆனால் அனுர குமார திஸாநாயக்க பாரிய பொருளாதார வீழ்ச்சியைப் பயன்படுத்தி மஹிந்த குடும்பத்தினரையும் அவரின் ஆட்களையும் வீழ்த்தி தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார் அதன் வெற்றியால் இன்று ஜனாதிபதியாக உயர்ந்திருக்கின்றார்.
இத்தனை ஆண்டுகளாக வாயளவில் அரசியல் செய்தவர்களை செயலளவில் நிரூபிக்க சிங்கள மக்கள் வாய்ப்பளித்திருக்கின்றார்கள். ரணில் அவர்கள் முன்னெடுத்த பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை அப்படியே பின்பற்ற வேண்டிய நிலைமை அனுர குமாரவிற்கு உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலை பின்பற்ற வேண்டிய நிலைமை உள்ளது. இவர் தமது பழமைவாத அரசியலை கையில் எடுத்தால் நாடு மீண்டும் பெரும் நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்படும்
மறுபடியும் ரணிலை ஜனாதிபதியாக அமர்த்த வேண்டிய நிலைமைக்கு போகவேண்டிவரும். வரலாற்றில் முதன்முறையாக அனுர குமார திஸாநாயக்க அவர்களின் கட்சியினர் தேர்தலுக்காக பல கோடிகளைச் செலவு செய்திருந்தார்கள். இவற்றுக்கு யார் உதவியது என்பது தொடர்பில் கேள்விகள் எழுகின்றன. சீனா மறைமுகமாக உதவியதா எனக் கேள்விகள் எழுகின்றன. இந்தியாவிற்கு எதிரான மனநிலை கொண்ட இவர்கள் அதனையே தமது ஆட்சி அதிகாரத்தில் வெளிப்படுத்தினால் இலங்கை மீண்டும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படும். இனி வரும் வாரங்கள் அனுர குமார திஸாநாயக்க அவர்களின் அரசியலை டாலர் தீர்மானிக்க போகின்றது. திடீரென்று ரூபாயின் பெருமதி குறைந்து டாலரின் பெறுமதி அதிகரித்துக் கொண்டிருந்தால் அவரின் அரசியல் முடிந்துவிட்டது என்பதுதான் பொருள்.
தமிழ்நாட்டில் சீமானை போன்று சீமான் கட்சியை போன்று மாற்று அரசியலை முன்னெடுத்து மூன்றாம் நிலையில் இருந்து முன்னேறியுள்ளார் அனுர குமார திஸாநாயக்க. திருட்டு கருணாநிதி குடும்பத்தினை சீமான் எதிர்ப்பது போன்று திருட்டு மஹிந்த குடும்பத்தினரை எதிர்த்து பெரும் புரட்சியை ஏற்படுத்தி அதில் வென்றுள்ளார் அனுர குமார திஸாநாயக்க. இவரின் புரட்சியை சீமான் அவர்கள் பாடமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஏனெனில் மக்கள் எழுச்சி பெற போராட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். சீமானைப் போன்று சிங்கள மக்களிடம் பேசிப் பேசி மாற்றத்தை ஏற்படுத்திருக்கின்றார் அனுர குமார திஸாநாயக்க. இங்கே சிங்கள மக்களைப் போன்று அரசியல் அறிவு உள்ளவர்களாக தமிழ்நாட்டு மக்கள் இருக்கவில்லை என்பது இங்கு கவலைக்குரிய விடயம்தான். தமிழ்நாட்டில் உள்ள பொலி இடதுசாரிகள் இதனை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது அனுர குமார திஸாநாயக்க அரசியல் பிழைப்புக்காக திருட்டு மஹிந்த கும்பலுக்கு அடிமையாகவில்லை மாறாக எதிர்த்துப் போராடி மக்களாட்சியையும் ஜனநாயக ஆட்சியையும் நிறுவியுள்ளார். இன்று மஹிந்த புதல்வர் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டார் அவர் படுதோல்வியை அடைந்திருக்கின்றார் இதன் மூலம் மஹிந்தவின் குடும்ப அரசியல் அழிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் இத்தேர்தலில் நான்காம் ஐந்தாம் இடங்களுக்கு சென்று விட்டார்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
சீமானுக்கு அப்படியொரு வாய்ப்பு எப்போ வருமோ.?