ஆதவ் அர்ஜுன் அடிமையா திருமாவளவன்..?

Image

கட்சிக்குள் எக்கச்சக்க புகைச்சல்

கொள்கைப் பிடிப்புள்ள ஒரே தலைவர் திருமாவளவன் என்று தி.மு.க.வினரும் பாராட்டி வந்த காலம் போய், சொந்தக் கட்சியினரே அவரது தலைமையை சந்தேகிக்கும் நிலைமை வந்துவிட்டது. ஆதவ் அர்ஜுன் பேச்சு தப்பு என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் நழுவுவதைக் கண்டு ஆதவ் அர்ஜுனின் அடிமையாக மாறிவிட்டார் திருமாவளவன் என்று அவரது கட்சியினரே சந்தேகம் எழுப்புகிறார்கள்.

மதுவிலக்கு மாநாடு என்று திருமாவளவன் பேசிய நேரத்திலேயே, இது ஆதவ் அர்ஜுனின் கருத்து என்று பேச்சு எழுந்தது. அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்தார் திருமாவளவன். அடுத்து ஆட்சியில் பங்கு வீடியோவை அட்மின் போட்டார் என்று எஸ்கேப் ஆனார். இப்போது வட தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இல்லை என்றல் தி.மு.க.வால் வெல்ல முடியது என்ற பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காமல் எங்கள் கட்சியும் கொள்கையும் முக்கியம் என்று பேசுகிறார்.

இதையடுத்து திருமாவின் கொள்கை எப்படிப்பட்டது என்று கடந்த கால வரலாற்றை எடுத்துப் போட்டு விளாசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து முதல் முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் திருமாவளவன். குஜராத் கலவரத்திற்கு பின்னரும் அந்தக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்த நேரத்தில் உங்கள் கட்சியின் கொள்கை என்னவாக இருந்தது..?

மக்கள் நலக் கூட்டணி உருவாக்கினால் கருணாநிதியை தோற்கடித்து ஜெயலலிதாவை ஆட்சியில் அமரவைத்துவிடலா என்று திட்டமிட்டு செயலாற்றிய நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை என்னவாக இருந்தது..?

இப்போது 2026 தேர்தலில் இரட்டை இலக்கத்தில் சீட் வாங்க ஆசைப்பட்டு ஆதவ் அர்ஜுனை பேசவிட்டு தி.மு.க.வினரின் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டார். விசிக தாக்கல் செய்த அருந்ததியர்களின் 3% உள் ஒதுக்கீடுக்கு எதிரான மனு தாக்கல் ஆதவ் அர்ஜுனின் பேட்டி ஆகிய இரண்டும் களத்தில் கூட்டனி கட்சிகளின் ஆதரவை இழக்க செய்துள்ளது. இதை எல்லாம் சரி செய்து திருமா திமுக கூட்டணியில் தொடர வாய்ப்பு இல்லை என்றே சொல்கிறார்கள்.

ஆதவ் அர்ஜுனிடம் அப்படி என்ன மகிமை இருக்கிறது என்று தெரியவில்லையே..?

Leave a Comment