மாநகராட்சி ஆவணங்களில் முறைகேடு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி –  270

மாநகராட்சி சொத்துக்களை திருடுவதற்கென்றே காலம் காலமாக ஒரு கூட்டம் இருந்துவந்தது. அதாவது மாநகராட்சிக்குச் சொந்தமான சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்துக்கொள்வார்கள். அவர்களுடைய திருட்டுத்தனத்துக்கு ஏற்ப மாநகராட்சியில் உள்ள பதிவுகளைத் திருத்தும் அளவுக்கு வில்லங்கமான நபர்கள் எல்லாம் இருந்தார்கள்.

அதாவது, மாநகராட்சியின் நிலம்  மற்றும் உடைமைத் துறையில்  பிளாக் மேப், பதிவேடுகள் போன்ற பல்வேறு ஆவணங்களும் காலம்காலமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில்தான் நிலங்கள் பற்றிய  விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு,  அதற்கான உரிமம் வழங்கப்படுகிறது. ஆகவே, இதுவே மாநகராட்சியின் மிகப்பெரிய சொத்து.

மேயர் சைதை துரைசாமி பதவிக்கு வந்த நேரத்தில் தற்செயலாக இந்த ஆவணங்களைப் பார்க்க நேர்ந்தது. மாநகராட்சி வசம் இருந்த  ஆவணங்கள் எல்லாம்  அரதப்பழசு என்பதால்,  மக்கி கிழிந்த நிலையிலும், கிட்டத்தட்ட அழியும் நிலையிலும்  இருந்தன. போதிய பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் இருந்த காரணத்தால், பெரும்பாலான ஊழியர்கள் இந்த ஆவணங்கள் இருக்கும் பக்கம் தலை வைத்தே படுப்பதில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஒரு சிலர் இந்த ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்துவது சாதாரணமாக இருந்தது.

மாநகராட்சியின் சொத்தாக கருதப்படும் ஆவணங்கள் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்தே போனார் மேயர் சைதை துரைசாமி.  மாநகராட்சி ஆவணங்கள் பாதுகாப்பு  குறித்து யாரும் கவலைப்படவில்லை என்பதே சைதை துரைசாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இப்படி கேட்பாரற்று ஆவணங்கள் இருப்பதாலே முறைகேடு செய்பவர்களுக்கு வசதியாக இருப்பதை மேயர் புரிந்துகொண்டார். மாநகராட்சி நிலத்தை அபகரிக்கும் வகையில் இனிமேல் தில்லுமுல்லுகள், முறைகேடுகள், தவறுகள் நடந்துவிடக் கூடாது என்று முடிவெடுத்தார். ஆகவே, மாநகராட்சியின் அனைத்து ஆவணங்களையும் கணினிமயமாக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். வழக்கம் போல் இதையும் அதிகாரிகள் ஏளனமாகவே பார்த்தார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment