என்ன செய்தார் சைதை துரைசாமி – 525
அம்மா உணவகம் முதல் கட்டமாக காலை, மதியம் என இரண்டு வேளை மட்டும் இயங்கும் வகையில்தான் திட்டமிட்டிருந்தார் மேயர் சைதை துரைசாமி. மக்கள் வரவேற்பு, தேவை ஆகியவற்றைக் கணக்கிட்டு இரவு நீட்டிக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தார்.
காலையும், மதியமும் அம்மா உணவகத்திற்கு அமோக வரவேற்பு கிடைப்பதைப் பார்த்ததும், இரவு நேரத்திற்கும் உணவு கொடுப்பதை உடனடியாக நிறைவேற்றும் முடிவுக்கு வந்தார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இரவு உணவு குறித்துப் பேசினார். இரவு உணவுக்கு மெனு கேட்டுத் தெரிந்துகொண்டதும், ஜெயலலிதா உடனடியாக அனுமதி கொடுத்தார்.
இரவு நேர உணவு எளிமையாக அதேநேரம் கூடுதல் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி சப்பாத்தியும் பருப்புக் கடைசலும் சரியாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டது. இரண்டு சப்பாத்தியுடன் பருப்புக் கடைசலுக்கு 3 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கோதுமை ரேஷனில் இருந்து மானிய விலையில் பெற்றுக்கொண்டதால், இரண்டு சப்பாத்தி தயாரிப்புக்கான அடக்கவிலை 1.50 ரூபாய் மட்டுமே ஆனது என்பது வெளியே யாருக்கும் தெரியாத ரகசியம். சப்பாத்திக்கு வழங்கப்படும் பருப்புக் கடைசல் ருசியாக இருப்பதற்குரிய சமையல் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்தப்பட்டது.
இரவு நேரத்தில் சப்பாத்தி அறிமுகம் செய்யப்படும் தகவல் வெளியானதும், மக்களிடம் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா அரசாங்கத்தை ஏழை, எளிய மக்கள் மனதாரப் பாராட்டினார்கள்.
- நாளை பார்க்கலாம்.
