பேருந்து நிழற்குடையில் புதுமை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 255

பேருந்து நிழற்குடையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உரிமை பெற்றுக் கொடுத்த மேயர் சைதை துரைசாமிக்கு பெருத்த பாராட்டு கிடைத்தது. இந்த வருமானம் பெருநகர சென்னை மேம்பாட்டுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட   பேருந்து நிறுத்தங்களில் சுமார் 1,821  நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கொண்டுவருவதில் மேயர் சைதை துரைசாமிக்கு விருப்பம் இல்லை. ஆகவே  மாநகராட்சி நிதி,  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி,  வார்டு உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தமிழ்நாடு மேம்பாட்டு நிறுவனம் மூலமாக  644 நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டன. இவை தவிர தனியார் நிதி மூலம்  கட்டுதல், பராமரித்தல் மற்றும் பின் ஒப்படைத்தல் என்ற முறையில் 667 நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டன.

ரோடு மீது ரோடு போடுவது போன்று வழக்கமான பேருந்து நிழற்குடையாக இல்லாமல் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலும் நீண்ட நாட்கள் பயன்படும் வகையில் அமைப்பதற்கு மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். படிக்காத மக்கள், ஊருக்குப் புதிதாக வருபவர்களும் எளிதாகப் புரிந்துகொண்டு பயணிப்பதற்கு பேருந்து நிழற்குடைகள் உதவ வேண்டும் என்று வடிவமைத்தார். எனவே நவீன பேருந்து நிழற்குடைகளில் அந்தந்த பேருந்து நிறுத்தங்களில் நின்றுசெல்லும் பேருந்துகளின் தடம் எண்கள், இடம் போன்றவை பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டன.

இந்த நேரத்தில் சைதை துரைசாமிக்கு சவாலாக ஒரு விஷயம் எழுந்தது. அதாவது ஒரே இடத்தில் வரிசையாக இரண்டு அல்லது  மூன்று பேருந்து  நிழற்குடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆர்வம் காட்டினார்கள். நிறைய இடங்களில் ஒரே ஒரு நிழற்குடை அமைப்பதற்கே இயலாத நிலையில், ஒரே இடத்தில் எதற்காக வரிசையாக இரண்டு அல்லது மூன்று அமைக்கத் திட்டமிடுகிறார்கள் என்பதை ஆய்வு செய்தார்.

அதன் பிறகே மேயர் சைதை துரைசாமிக்கு அந்த செயலுக்குப் பின்னே இருந்த விவகாரம் தெரியவந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment