இது நல்ல செய்தி
திராவிட மாடல் அரசு இப்போது, மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயும் புதுமை பெண் திட்டம் 1000 ரூபாயும் தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் 1000 ரூபாயும் வழங்கிவருகிறது. இந்த தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்க் வருமான உச்சவரம்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றவர்கள். அரசு உதவிப் பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள்.
கல்லூரிகளில் 3-ம் ஆண்டுகள் வரை படிக்கும் மாணவர்கள், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 4-ம் ஆண்டு வரை படிக்கும் மாணவர்கள், மருத்துவ கல்லூரிகளில் 5-ம் ஆண்டு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் மருத்துவம், சட்ட கல்லூரிகளில் 3, 4-வது ஆண்டுகள் படிக்கும் மாணவர்களும், இதற்கு இணையான படிப்புகள் படிப்பவர்களும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
அத்துடன் வேறு திட்டத்தில் உதவித்தொகை பெற்றாலும், தகு தியாக கருதப்படுவார்கள். இந்த திட்டத்தை பொறுத்தமட்டில் ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் தகுதி பெற்றாலும் விண்ணப்பிக்கலாம். வருமான உச்சவரம்பு என எந்த பாகுபாடும் இல்லை.
எனவே, தகுதி இருக்கும் அத்தனை பேரும் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.