வாரச்சந்தையில் வருமானம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 387

அம்மா உணவகத்தில் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டன. அதேநேரம் மாநகராட்சியின் இடம் பயன்படுத்தப்படுகிறது. நியாயவிலைக் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப்படுகிறது என்பதால் குறைந்த செலவிலேயே அம்மா உணவகத்தை திறம்பட நடத்தமுடியும் என்று செய்து காட்டினார் மேயர் சைதை துரைசாமி.

அதேவழியில் வாரச்சந்தை மூலமாக மாநகராட்சிக்கு வருமானம் கிடைப்பதற்கும் மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். அதாவது, வாரச்சந்தைக்கு வரும் வாகனங்கள் மூலம் போதிய வருமானம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டார். அந்த வகையில் இருசக்கர்ர வாகனம், மூன்று சக்கர வாகனம், கார் போன்ற வாகனங்கள், வேன் போன்ற வாகனங்கள் என ஒவ்வொன்றுக்கும் கட்டணம் வசூலிப்பதற்கு வழிவகை செய்தார்.

அதோடு, வாரச்சந்தையில் விளம்பர போர்டுகள் வைப்பதற்கும் அதற்கு கட்டணம் வசூலிக்கவும் திட்டம் வகுத்தார். அதிக கூட்டம் வரும் இடங்களில் விளம்பரங்கள் வைப்பதற்கு நிறுவனங்கள் நிச்சயம் முன்வருவார்கள் என்பதால், இந்த கட்டணம் மூலமே வாரச்சந்தைக்கு ஆகும் செலவுகளை எடுப்பது மட்டுமின்றி, வருமானம் ஈட்டவும் வாய்ப்பு இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்.

வாரச்சந்தையின் செயல் திட்டத்தில் எந்த அளவுக்கு மேயர் சைதை துரைசாமி கவனம் செலுத்தினார் என்பதை அறிந்துகொள்வதே ஆச்சர்யமாக இருக்கும். அதாவது, வாரச்சந்தை முடிவடைந்த பிறகு அங்கு அளவுக்கு அதிகமாக குப்பைகள் சேர்ந்திருப்பதற்கு  வாய்ப்பு உண்டு. அது அப்படியே கிடப்பது சுகாதாரச் சீர்கேடு ஆகிவிடும். ஆகவே, முழுமையாக சுத்தம் செய்வதற்கும் தொகையை ஒதுக்கினார்.

எத்தனை செலவுகள் செய்தாலும், அதை மீறிய வருமானத்தில் அம்மா வாரச்சந்தையை நடத்த முடியும் என்று திட்டமிட்டுக் காட்டினார் சைதை துரைசாமி. இதன் மூலம் மக்கள் பெருமளவு பணம் சேமிக்க முடியும் என்பதுடன் விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களுக்கும் ஆதாயம் கிடைக்கும் என்று திட்டமிட்டார். இந்த திட்டம் நிறைவேறியிருந்தால் அம்மா உணவகம் போன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மேயர் சைதை துரைசாமிக்கும் அழியாப் புகழ் கிடைத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment