• Home
  • அழகு
  • இலியானா, ஐஸ்வர்யா ராய் அழகு ரகசியம்

இலியானா, ஐஸ்வர்யா ராய் அழகு ரகசியம்

Image

அட, இம்புட்டுத்தானா..?

  •  

சினிமாவில் நடிகைகள் கொள்ளை அழகுடன் காட்சியளிப்பதை பார்த்திருக்கிறோம். அது எப்படி அவர்களுக்கு மட்டும் மாசு, மருவற்ற அழகான சருமம் அமைந்திருக்கிறது என்ற ஆச்சர்யம், பொறாமை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுவது இயல்புதான்.

நடிகைகளுக்கு மட்டும் இத்தனை அழகு என்பது உண்மை இல்லை. ஏனென்றால், அவர்களை பல்வேறு வகையில் அலங்கரித்து, பல்வேறு கோணத்தில் படம் எடுத்து, அவற்றில் இருந்து தேர்தெடுத்த காட்சிகளை மட்டுமே மக்கள் பார்வைக்கு வைக்கிறார்கள். அதனால்தான் நடிகைகள் பேரழகிகளாக இருக்கிறார்கள்.

உண்மையில் நடிகைகளுக்கும் அழகு பற்றி தாழ்வு மனப்பான்மை இருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இலியானா. ஒல்லி இடுப்புக்காரி இலியான சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ன கூறியிருக்கிறார் என்று பார்க்கலாமா?

 “என்னுடைய தோற்றம் குறித்து நான் கவலைப்பட்டுள்ளேன்.  என்னுடைய அகலமான இடை குறித்தும், தளர்வான தொடைகள் குறித்தும், போதிய அளவு குறுகலாக இல்லாத விலா குறித்தும்,  வயிறு போதுமான அளவு தட்டையாக இல்லையென்றும், மூக்கு நேராக இல்லையென்றும், உதடுகள் முழுமையானதாக இல்லையென்றும் கவலைப்பட்டேன். நான் போதுமான உயரம் இல்லையென்றும், எனக்குப் போதுமான அழகு இல்லையென்றும், போதுமான புத்திசாலித்தனம் இல்லையென்றும், போதுமான அளவு கச்சிதமாக இல்லையென்றும் கவலைப்பட்டிருக்கிறேன்.

நான் கச்சிதமாக இருக்கவேண்டியதில்லை என்பதை உணராமல் இருந்திருக்கிறேன். நான் என் குறைகளுடன் அழகாக இருக்க வேண்டியவள். வித்தியாசமான, தனித்துவமான பெண்ணாக இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு தழும்பும், வீக்கங்களும், ஒவ்வொரு குறையும் என்னை உருவாக்கின. எனக்கே எனக்கான
அழகை உருவாக்கின.

உலகம் அழகு என்று எதை முடிவு செய்து வைத்துள்ளதோ அதற்குள் என்னைப்  பொருத்திக் கொள்வதை நிறுத்தினேன். அதற்குள் எப்படியாவது பொருந்திப் போக வேண்டும் என்று அரும்பாடுபடுவதை நிறுத்தினேன். நான் தனித்துவமாக இருக்கப் பிறந்திருக்கும்போது, ஏன் அப்படிப் பொருந்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆம், உண்மையில் ஒவ்வொரு பெண்ணும், அவர்களது அழகும் தனித்துவமானது. ஆனால், பெரும்பாலான நடிகைகள் சொல்லும் அழகு ரகசியம் என்ன தெரியுமா?

’’பழச்சாறு நிறைய குடிப்பேன். காலை டிபன் சாப்பிட்டு விட்டு ஜூஸ் குடிப்பேன். மாலையில் வெளியே போய் விட்டு வந்ததும் ரோஸ் வாட்டரில் கிளிசரின் கலந்துப் பேன். அதை உடம்பு பூராதேய்த்து சுத்தம் செய்வேன். முகத்தில் பேஸ்வாசுக்கு குழந்தைகளுக்கான பேபி சோப்பை பயன்படுத்துகிறேன். அந்த சோப்பை வச்சி முகம் கழுவினால் பளபளனு ஆயிடும். இரவு படுக்கப்போகும் முன் பேபி ஆயிலை உடம்பு பூராதேய்ச்சி மசாஜ் பண்ணுவேன்.

தினமும் 4, 5 கிளாஸ் இளநீர் தவறாமல்குடிப்பேன். பாலாடையில் பயித்தம் பருப்பு மாவை சேர்த்து கலக்குவேன். குளிக்கப்போகும் முன் அதை உடம்பு பூராபூசுவேன். குளியல் தொட்டியில் வெது வெதுப்பான நீரை நிரப்பி மணிக்கணக்கில் அதில் படுத்திருப்பேன். குளித்து முடித்து தொட்டியில் இருந்து வெளியே வரும்போது தேகம் பூராபுத்துணர்ச்சியாக இருக்கும்.

உணவு நிபுணர்கள் ஆலோசனைகள் கேட்டு எவ்வளவு கலோரி உடம்புக்கு தேவையோ அந்த அளவு சாப்பிடுவேன். பெரும்பாலும் அரிசி உணவுகளை தவிர்த்திடுவேன். சாதம் அரிதாகத்தான் சாப்பிடுவேன்.

ஃப்ரூட் சாலட் நிறைய சாப்பிடுவேன். இளநீர் அடிக்கடி குடிப்பேன். சூட்டிங் போகும் போது உலர்ந்த பழவகைகளை கொண்டு போவேன். படப்பிடிப்பு இடைவேளையில் அவற்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன். தலைமுடி பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம்கொடுக்கிறேன். தினமும் தேங்காய் பாலை தலையில் தேய்த்து குளிப்பேன். மாதத்துக்கு நான்கு, ஐந்து முறை தலையில் ஹென்னா (மருதாணி) போட்டு குளிப்பேன். தலை முடிவலுவா, மிருதுவா இருக்கும்.

உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கேன். கண்டதையெல்லாம் திண்பதில்லை. சாதத்தை நிறுத்திட்டேன். சப்பாத்தி தான் சாப்பிடுறேன். தேங்காய் எண்ணையை சூடாக்கி தலைக்கு தேய்த்து குளிப்பேன். குளிச்சி முடிச்ச பிறகு டவலை வெந்நீரில் முக்கி பிழிந்து தலைமுடி மேலே கட்டிக்குவேன். முடிக்கு ஷாம்புபோடமாட்டேன். சீயக்காய் தேய்ச்சிதான் குளிக்கிறேன்..’’என்று பெரும்பாலும் வீட்டில் கடைபிடிக்கும் அழகு நடைமுறைகளைத்தான் நடிகைகளும் கடைபிடிக்கின்றனர்.

இறுதியாக அழகுக்கு உலகப் பேரழியாக நாம் இன்றும் கருதும் ஐஸ்வர்யாராய் கொடுக்கும் டிப்ஸ் என்னவென்பதை மட்டும் பார்க்கலாம்.  ‘‘நான் தினமும் இளம் சூடுள்ள நீரில் எலுமிச்சை சாறும், தேனும் கலந்து லோஷன் போன்று தயாரித்து சருமத்தில் பூசுகிறேன். சிறுபயறு தூளுடன், தயிர், பால் போன்றவைகளை கலந்து ஸ்கின் மொயிசரைசராக பயன்படுத்துகிறேன். இது என் சருமத்தை பளபளப்பாக்குகிறது. வெள்ளரிக்காயை அரைத்து பூசுவதும் உண்டு’’ என்கிறார்.

அப்புறமென்ன, நீங்களும் உங்களை இந்த வழிகளில் அழகுபடுத்தி சினிமா நடிகைகளை விஞ்சும் வகையில் மாறிவிடுங்கள்.

Leave a Comment