சிரிக்கலைன்னா ஜெயிலுதான்…

Image

ஹிஹி ஜோக்ஸ்

பெண் : சார், இட்லி மாவு வாங்கப்போன என் புருஷனை ஒரு வாரமா காணோம்…

போலீஸ் : ஒரு வாரமா என்னம்மா செஞ்சே..?

பெண் : வேறென்ன பண்றது சார், உப்புமாதான் செஞ்சு சாப்பிட்டேன்.

…………………..

போலீஸ் : திருடன் உங்க பொண்டாட்டியை மட்டும் அடிச்சிருக்கான், உங்களை ஏன் அடிக்கலை….?

கணவன் : என் பொண்டாட்டியை அடிச்சதுக்காக அவனை பாராட்டிட்டு இருந்தேன்.

……………….

போலீஸ் : ஏன் எங்களைப் பார்த்ததும் ஓடுறே… என்ன தப்பு செஞ்சே…

இளைஞன் : எந்த தப்பும் பண்ணலேன்னு காசு கேட்பீங்கன்னு பயந்துட்டேன்சார்.

………………….

போலீஸ் : உங்க வீட்ல திருடுனவனை எதுக்காக பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரியில் போய் தேடச் சொல்றே..?

கணவன் : அவன் என் பொண்டாட்டி செஞ்சி வைச்சிருந்த உப்புமாவை சாப்பிட்டுப் போயிட்டான் சார்.

………………….

கைதி : என்னை வேற ஏதாவது சிறைக்கு மாத்துங்க சார்…

போலீஸ் : ஏன், இங்கே என்ன குறை

கைதி : செல்போனுக்கு சிக்னல் சரியா கிடைக்க மாட்டேங்குதே…

…………………

அவன் : வீட்ல ஒரு பைசாகூட இல்லாம திருடன் எடுத்துட்டுப் போயிட்டான்…

இவன் : போய் போலீஸ்ல சொல்லு.

அவன் : அட, போலீஸுக்குக் கொடுக்கத்தான் என்கிட்டே எதுவுமே இல்லையே

…………………

Leave a Comment