சாம்சங் வேலை நிறுத்தம் கிளைமாக்ஸ்
சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டம் 31வது நாளைத் தாண்டியும் நடைபெற்று வருகிறது. மழையிலும் தொடர்ந்து நடக்கிறது. இந்த நிலையில் வரும் 15ம் தேதிக்கு இந்த போராட்டத்துக்கு கிளைமாக்ஸ் காட்சி நடக்கப் போவதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து சி.ஐ.டி.யூ. இயக்கத்தினர் போராட்டம் நடத்திவரும் நிலையில், காவல் துறையினர் மூலம் போராட்டக்காரர்களை ரகசியமாக மிரட்டுவதும், கைது செய்வதும் தொடர்கிறது. இதையடுத்து காணாமல் போன தொழிலாளர்களைக் கொண்டுவர நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் 15.10.2024 முதல் வேலைக்கு வராத ஊழியர்களை பணிநீக்கம் செய்து புதிய ஊழியர்களை நியமிக்க சாம்சங் நிறுவனம் முடிவு எடுத்திருபதாக சொல்லப்படுகிறது. நிறுவனம் எடுத்திருக்கும் கணக்கின் படி இப்போது 640 ஊழியர்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர்.
ஆகவே, வரும் 15ம் தேதியன்று பணிக்குத் திரும்பாத ஊழியர்களுக்கு மெசேஜ் மூலமாகவும் ஈமெயில் மூலமாகவும் இறுதி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 15ம் தேதி பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தெரியவந்துள்ளது. .ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 19 (1) (c) படி ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளிகள் சங்கம் அமைப்பது அவர்களது அடிப்படை உரிமை. இதில் யாரும் எதுவும் செய்ய முடியாது என்று சிஐடியு சங்கம் இன்னமும் பிடிவாதம் காட்டுகிறது.
எப்படியென்றாலும் இரண்டு நாட்களில் இந்தப் போராட்டம் முடிவுக்கு வருகிறது என்பது மட்டும் உண்மை.