• Home
  • அரசியல்
  • ஸ்டாலின் மன்னிப்பு கேட்கலைன்னா விடமாட்டோம்…

ஸ்டாலின் மன்னிப்பு கேட்கலைன்னா விடமாட்டோம்…

Image

ராமதாஸ் அவமானத்துக்கு கொதிக்கும் அன்புமணி

அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ள தமிழக மின்துறை ஊழல் பற்றியும், அதானி அவர்களை தங்கள் இல்லத்தில் வைத்து சந்தித்தது பற்றியும் வாய் திறக்க மாட்டீங்களா ஸ்டாலின். கேள்வி எழுப்பினால் ஆணவத்துடன் பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல. எங்கள் அய்யாவால் தான் உங்கள் தந்தை முதலமைச்சரானார். நீங்கள் துணை முதலைச்சரானிர்கள் *முதலமைச்சர் தார்மீகமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கொதிநிலையில் துடிக்கிறார்.

இன்று முதல்வர் ஸ்டாலிண்டம், ‘’அதானி விவகாரம் குறித்து டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாரே?’ என்று கேட்டதற்கு முதல்வர்:ஸ்டாலின், “அவருக்கு வேறு வேலையில்லை. அதனால் தினமும் அறிக்கை விட்டுக்கொண்டே இருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை.” என்று கடந்து சென்றுவிட்டார்.

ஏற்கெனவே அதானி பற்றி கேள்வி எழுப்பிய நேரத்திலும், ‘சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டார், இதில் மேற்கொண்டு பேசுவதற்கு எதுவுமில்லை’ என்று கூறியிருந்தார். இப்போது ராமதாஸை அவமானம் செய்துவிட்டதாக கொதித்திருக்கும் அன்புமணி, ‘’முதல்வர் ஸ்டாலின் பொறுப்புடன் நடந்துக்கொள்ளுங்கள், உங்கள் தந்தையிடம் ஒரிந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை அவரைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள், விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது முதல்வரின் கடமை. முதல்வரின் பேச்சு அவரது பதவிக்கு அழகல்ல.

முதல்வர் அவர்களே உங்களை பார்த்து கேள்விகளை கேட்டக்க ஓவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது, ஆனால் இங்கே பலரும் முதுகெலும்பு இல்லாதவர்களாய் இருப்பதால் மக்களின் சார்பில் மருத்துவர் அய்யா கேள்வி எழுப்பினார் ஆனால் உங்களைப்பார்த்து கேள்வி கேட்டால் வேலை இல்லை என்று அர்த்தம் இல்லை மாறாக உங்களை பார்த்து கேள்வி கேட்டும் திராணியும் தெம்பும் உள்ளதனால் அவர் கேட்ப்பார், கேட்டுக்கொண்டுதான் இருப்பார்…நீங்கள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் காத்திருங்கள்…’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மன்னிப்பு கேட்கலைன்னா விட மாட்டோம் என்று சமூகவலைதளத்தில் திமுகவும் பாமகவும் கட்டி உருள்கின்றன.

Leave a Comment