ஹைட்ரஜன் நீர் எனும் கருங்காலி மாலை

Image

ஏமாத்துறாங்கப்பா ஜாக்கிரதை

எல்லோரும் மண் பானை தண்ணீர் குடித்த காலத்தில், பணக்காரர்கள் பிஸ்லரி தண்ணீர் குடித்தார்கள். இப்போது சாதாரண மக்களும் ஆர்.ஓ. வாட்டர் குடிப்பதால் பணக்காரர்கள் ஹைட்ரஜன் வாட்டருக்கு மாறிவிட்டார்கள்.

அதென்ன ஹைட்ரஜன் வாட்டர்..?

நீரில் இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும், ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறும் இருப்பது கொஞ்சம் அறிவியல் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் தண்ணீரை ஹெச்.2ஓ என்று சொல்வார்கள். இதில் ஆக்சிஜனை விட அதிக ஹைட்ரஜன் மூலக்கூறுகளை சேர்ப்பதே ஹைட்ரஜன் நீர்.

ஹைட்ரஜன் நீர் உடலுக்கு அதிகப்படியான ஆற்றல் தருகிறது என்றும் உடல் செல்களைப் பாதுகாக்கிறது என்ற நம்பிக்கையால் பணக்காரர்களும், விளையாட்டு வீரர்களும் இதனை குடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சருமத்தில் உள்ள ஹைட்ரேட்டுகள் அதிகரிப்பதால் சருமம் இளமையாக இருப்பதோடு, அலர்ஜிகளைத் தடுப்பதுடன் மென்மையான சருமத்தைக் கொடுக்கிறது என்றும் உடல் கொழுப்பைக் குறைத்து எடை அதிகரிப்பதைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கும் ஹைட்ரஜன் வாட்டர் நல்லது என்று புரமோசன் செய்யப்படுவதால் இப்போது நடுத்தர மக்களும் இதற்கு மாறிவருகிறார்கள். ஆனால், ஹைட்ரஜன் வாட்டரின் நன்மைகள் எதுவுமே இன்னமும் மருத்துவரீதியாக உறுதிபடுத்தப்படவில்லை. ஆய்வுகளும் செய்யப்படவில்லை. எனவே, இதுவும் ஒரு கருங்காலி மாலை சூதாட்டம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

Leave a Comment