டீசன்ட் என்றால் இம்புட்டுத்தான்.
குனிந்த தலை நிமிராமல் செல்போன் பார்த்தபடி அவரவர் வழியில் மனிதர்கள் செல்லும் காலகட்டத்தில் வாழ்கிறோம். ஆனாலும், ஒருசிலர் அடுத்தவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நீட்டுகிறார்கள்.
இந்த காலத்தில் ரொம்பவும் டீசண்ட் பார்ட்டி என்பதற்கு சில இலக்கணம் இருக்கிறது. அவற்றை தெரிந்துகொண்டு பின்பற்றுங்கள்.
- ஒருவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம். அது வில்லத்தனம். ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு அவர் லைனுக்கு வரும் வரை காத்திருங்கள்.
- பிறருடைய கார், டூவீலர், நகை போன்றவற்றை ஒருபோதும் இரவல் கேட்காதீர்கள்.
- சிறிய தொகையை ஒருபோதும் கடன் கேட்காதீர்கள், அதை சமாளிக்கும் வழியை பாருங்கள். அதேபோல் பிறருடைய பணத்தை, அலுவலகப் பணத்தை ரொட்டேட் செய்யாதீர்கள்.
- வயது, சம்பளம், எப்போது திருமணம், எப்போது குழந்தை என்றெல்லாம் யாரிடமும் கேட்கவே கேட்காதீர்கள்.
- தயவுசெய்து, மன்னிக்கவும், நன்றி போன்ற வார்த்தைகளை பேச்சுக்கு இடையில் தயக்கமின்றி பயன்படுத்துங்கள். இவை அற்புதங்கள் செய்வதைக் காண முடியும்.
- பிறர் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஒருபோதும் இடையில் புகுந்து பேசாதீர்கள். அவர் முழுமையாக பேசிய பிறகு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
- பிறர் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் செல்போன் நோண்டாதீர்கள்.
- யாரை சந்திப்பது என்றாலும் நேரம் தவறாமையைக் கடைபிடியுங்கள்.
- ஹோட்டலில் குடும்பத்துடன் போனாலும் நண்பர்களுடன் போனாலும் அடுத்தவர்களுக்கு நீங்கள் ஆர்டர் செய்யாதீர்கள், அவரவர்கள் தேவையானதை வாங்கிக்கொள்வார்கள்.
- உறவினர்கள், நண்பர்கள் யாராவது வரும் நேரத்தில் டிவி பார்த்துக்கொண்டு பேசாதீர்கள். டி.வியை வால்யூம் குறைத்து வைத்துப்பேசுவது, மியூட்டில் போட்டு பேசுவதும் சரியல்ல.
- டிராபிஃக்கில் நிற்கும்போது ஹார்ன் அடிக்காதீர்கள். எல்லோருமே விரைந்து போகவே நிற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அமைதியாக இருங்கள்.
- பயணத்தில் யாரேனும் முந்திச்செல்வதற்கு அலை பாய்கிறார்கள் என்றால், உடனே விட்டுக்கொடுத்து வழி விடுங்கள். இவர்களே நிறைய விபத்துகளுக்குக் காரணமாகிறார்கள்.
- பயணத்தில் வழி தெரியவில்லை என்றால் நடுரோட்டில் நின்றுகொண்டு சந்தேகம் கேட்காதீர்கள்.
- வாஸ்து அமைப்பு சரியில்லை, சட்டை கலர் சரியில்லை என்றெல்லாம் யாரிடமும் சொல்லாதீர்கள். பிறரது ரசனையை விமர்சனம் செய்வது சரியில்லை.
- கடன் கேட்பவர்களுக்கு பணம் கொடுங்கள் அல்லது இல்லை என்று சொல்லுங்கள். காரணம் கேட்காதீர்கள்.
- வாங்கிய கடனை சரியான தேதியில் திருப்பிக் கொடுங்கள். பணம் கொடுக்க முடியவில்லை என்றால் முன்கூட்டியே எப்போது தரமுடியும் என்பதைச் சொல்லிவிடுங்கள். கடைசி நாள் வரை காத்திருந்து இல்லை என்று சொல்ல வேண்டாம்.
- ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி பேசவேண்டாம். குண்டு, வழுக்கை, தொப்பை, கண்ணாடி என்பது அவர்களுடைய மனதைப் பாதிக்கலாம்.
- வேலைக்காரர், தள்ளுவண்டிக்காரர், கடைநிலை ஊழியர் என்றாலும் மதிப்பு கொடுத்துப் பேசுங்கள்.
இவற்றை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் ஒரு பழக்கமாகவே கொண்டுவந்துவிட்டீர்கள் எல்லாம், நீங்க தான் பர்ஃபெக்ட் ஜென்டில்மேன், ஜென்டில்உமன்.