• Home
  • மனம்
  • மன அழுத்தத்தில் இருப்பவரை எப்படி கண்டுபிடிப்பது..?

மன அழுத்தத்தில் இருப்பவரை எப்படி கண்டுபிடிப்பது..?

Image

சிம்பிள் டிப்ஸ்

ஒருவர் மன அழுத்தத்தில் இருப்பதை முகம் பார்த்து கண்டுபிடித்துவிட முடியாது என்றாலும், அவரது நடவடிக்கையை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் சிக்கலை அறிய முடியும். மன அழுத்தத்தில் இருப்பவர் எப்போதும் சோர்வாக இருப்பதுடன் போதிய அளவுக்கு தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவார். சின்னச்சின்ன விஷயங்களுக்கும் எரிச்சலும் கோபமும் கொள்வார். விருப்பமான உணவு இருந்தாலும் அதை சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்ட மாட்டார். அப்படியே சாப்பிட்டாலும் அதன் ருசியைப் பாராட்ட மாட்டார். யார் என்ன கேள்வி கேட்டாலும் ஒரு வார்த்தை அல்லது இரண்டு வார்த்தைகளில் பதில் வரும்.

ஏதேனும் யோசனையில் தன்னை மறந்து இருப்பார். வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களிலும் போதிய ஆர்வம் காட்ட மாட்டார். கூட்டத்தோடு அமர்ந்திருந்தாலும் யார் பேசுவதையும் முழுமையாகக் கவனிக்க மாட்டார். ஏதேனும் சாக்கு சொல்லி தப்பித்து தனியே சென்று அமர்வதற்கு முயற்சி செய்வார். பேசுவதற்கு முயற்சி செய்பவர்களை புறக்கணிப்பார். தலைவலி, உடல்வலி என்று ஏதேனும் காரணம் சொல்லி மருந்து, மாத்திரைகள் போட்டுக்கொள்வார். சாதாரண விஷயங்களுக்கும் அதிக பதட்டம் அடைவார்.

இதுபோன்ற அறிகுறிகள் மன அழுத்தம் உள்ளவர்களிடமே ஏற்படுகிறது. இவர்களுக்கு அன்பும் ஆதரவும் ரொம்பவே முக்கியம். மனம் விட்டு பேசுவதற்கு முயற்சி செய்து அவரது பதட்டத்தை தணிக்க வேண்டும். தேவையெனில் மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள்.

Leave a Comment