உஷாரா இருந்துக்கோங்க.
மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் என்னவெல்லாம் செய்வார் என்று உறுதியுடன் சொல்ல முடியாது. இவர்களில் சைக்கோ கில்லர்களும் இருக்கலாம். சைக்கோ கில்லர்களை (psychopathic killers) அதாவது மனநிலை பாதிக்கப்பட்டு அதனால் கொலை செய்யும் நபர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம் என்றாலும் முடியாதது அல்ல. சில பொதுவான அடையாளங்களை வைத்து சைக்கோ கில்லர்களை கண்டுபிடிக்கலாம்,
இவர்கள் மிகப்பெரிய பொய்களைக் கூட நம்பும் வகையில் சொல்வார்கள். உண்மைகளை அப்பட்டமாக மறைப்பார்கள். பிறர் துன்பம், கவலைக் கண்டு ரசிப்பார்கள். இரக்கம் இல்லாமல் பேசுவார்கள். விலங்குகள், சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் மீது வன்முறை காட்டுவார்கள்.
தன்னை ரொம்பவே நல்லவர் என்று நம்பவைப்பதற்கு முயற்சி செய்வார்கள். பொது இடங்களில் நல்லவராகவும் தனிப்பட்ட முறையில் கொடூரமாகவும் நடந்துகொள்வார்கள். பயம், பதட்டம் இல்லாமல் எதையும் யோசிக்காமல் சில காரியங்களைச் செய்வார்கள். தவறு செய்த பிறகும் அதற்காக எந்த குற்றவுணர்வும், மனவேதனையும் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.
மனநிலை பாதிக்கப்பட்ட எல்லா சைக்கோபதிகளும் கொலை செய்யக்கூடியவர்கள் அல்ல, துன்பப்படுத்தி ரசிக்கக்கூடியவர்களாகவும் இருக்கலாம். எனவே, இப்படிப்பட்ட அடையாளங்களுடன் இருக்கும் நபர்களைக் கண்டால் ஒதுங்கிவிடுவது நல்லது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.