பொய் எளிதாக ஜெயிப்பது எப்படி..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : இன்றைய நாளில் பொய்யும் புரட்டும்தான் ஜெயிக்கிறது… ஏன்..?

  • எஸ்.கொடிமலர், சாத்தூர்.

ஞானகுரு :

எல்லா காலங்களிலும் பொய் ஜெயிக்கத்தான் செய்யும். ஆனால், அதன் ஆயுள் குறைவு. என்றாவது ஒரு நாள் அது போலி என்பது நிச்சயம் புரிந்துபோகும். எனவே, தோல்வியின் வெற்றியைக் கண்டு உண்மையை குறைவாக மதிப்பிட வேண்டாம்.

கேள்வி : வாழ்வில் தாய்வழி உறவின் ஆதிக்கம் ஏன்..?

  • என்.மணிராஜ், சூலக்கரை மேடு.

ஞானகுரு :

ஒரு காலத்தில் பெண்வழி சமூகமே இருந்தது. கர்ப்பப்பையின் ரகசியம் புரிந்தவுடன் பெண்கள் ஆதிக்கத்தை ஆண் உடைத்துவிட்டான். இந்த நூற்றாண்டில் மீண்டும் பெண்கள் ராஜ்ஜியம் தொடங்கியுள்ளது. பெரும்பாலான வீடுகளில் பெண் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. அதனாலே, பெண்ணின் உறவினர்களுக்கு வீடுகளில் மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் கிடைக்கிறது. அடுத்து வரப்போவது மீண்டும் பெண்கள் ஆதிக்கமே.  

Leave a Comment