தமிழ் முன்னோர்கள் ஆண்டுகளை எப்படி கணக்கிட்டார்கள்..?

திருவள்ளுவர் ஆண்டு

நம் தமிழ் முன்னோர்கள் நிலவின் வளர்பிறை, தேய்பிறை ஆகியவற்றைக் கொண்டு மாதங்களை உருவாக்கினார்கள். பருவநிலை மாற்றங்களைக் கொண்டே மாதங்களை வகுத்தார்கள். பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாசி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி (மார்கழி, தை) பின்பனி (மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது. ஒரு நாளிகை 24 நிமிடங்கள். சூரியன் வடக்கே, தெற்கே நகர்வதைக் கணக்கிட்டு, மீண்டும் அதே புள்ளிக்கு வருவதைக் (சூரிய பெயர்ச்சி) கொண்டு ஆண்டைத் தீர்மானித்தனர்.

இத்தனை நுணுக்கமாக கணக்கிட்டவர்கள் நீண்ட தொடர்ச்சியான ஆண்டுகளை நிர்ணயிக்கவில்லை. 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் கடைப்பிடித்தனர். அதனாலே அன்றைய அரசர்கள், புலவர்கள், சான்றோர்களின் பிறப்பு, இறப்பு போன்ற காலக்கணிதம் தெளிவாகத் தெரியவில்லை. 1971ம் ஆண்டு தமிழ் நாட்டியின் நிலையான வடிவம் அறிவிக்கப்பட்டது.

பல தமிழ் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மொழியியல் நிபுணர்கள்
திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கிமு 2ஆம் நூற்றாண்டு முதல் கிமு 1ஆம் நூற்றாண்டு என்று எடுத்துக் காட்டினர். இதன் சராசரி மதிப்பீடாக கிமு 31 என்பது திருவள்ளுவர் பிறந்த ஆண்டு என்று கணக்கிடப்பட்டது. அதன்படி தற்போது கடைபிடிக்கப்படும் கிரிகோரியன் ஆண்டிலிருந்து 31 ஆண்டுகள் கூட்டப்பட்டது. அந்த வகையில் இப்போது திருவள்ளுவர் ஆண்டு 2056 நடக்கிறது.

இந்த கணக்குகள் எல்லாம் மனிதருக்குத்தானே தவிர, இயற்கைக்கு இல்லை.

Leave a Comment