• Home
  • யாக்கை
  • திராட்சை விதையில் எத்தனை ஆச்சர்யங்கள்.

திராட்சை விதையில் எத்தனை ஆச்சர்யங்கள்.

Image

எம். ஜெயஸ்ரீ

சுமார் 5,000 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க திராட்சைப் பழம் உலகம் முழுவதும் மிகச் சிறந்த பழமாக பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு திராட்சை சாப்பிடும் பழக்கம் வழக்கமாக இருந்தால் உடலுக்கு எந்த நோயும் வராது என்று பல்வேறு நாடுகளில் உள்ள உணவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

திராட்சையை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் 100 கிராம் அளவிற்கு மிகாமல் எடுத்துக் கொள்ளலாம். அதையும் இரண்டு இரண்டு பழங்களாக வாயில் போட்டு சுவைத்து,நிதானமாக சாப்பிட வேண்டும்.  விதை உள்ள திராட்சையை சாப்பிடுவது தான் நல்லது. விதையை துப்பி விடாமல் மென்று சாப்பிடுவது மிகவும் முக்கியம். புற்றுநோய் எதிர்ப்புத் தன்மையில் தொடங்கி,நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது வரை பலவிதமான பயன்பாடுகள் விதையில் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.

திராட்சை எளிதில் புளித்து நொதித்து விடுவதால் அதனை பயன்படுத்தி ஓயின் தயாரிக்கிறார்கள். ஒயினை வீட்டில் தயாரிக்கும் முறை உலகம் எங்கும் பிரபலம்.

தொடர்ச்சியாக திராட்சையை எடுத்து வந்தால் அது முதலில் நம் உடலில் கல்லீரலில் மிகுந்துள்ள கெட்ட கொழுப்பை நீக்குகிறது. கல்லீரலில் தேங்கும் கழிவை அகற்றுகிறது. இதன் மூலம் நரம்பு மண்டலம் வலிமை பெறுகிறது.மேலும் கண்களுக்கு ஒளியும் கூடுகிறது. திராட்சை பயன்பாட்டால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். உற்சாகமாக வேலை செய்யலாம். அறிவுத்திறன் மேம்படும். திராட்சையால் தோல் வறட்சி நீங்கி இளமை தோற்றம் கிடைக்கும்.அழகான தோற்றத்துடன் மற்றவர்களை கவர்ந்து ஈர்க்கலாம்.

மலச்சிக்கல் சரியாகும். பெருங்குடல் சிறு குடலில் உள்ள புண்கள் ஆறும்.

திராட்சையை புதிய பழமாக எடுக்க முடியாதவர்கள் உலர்ந்த திராட்சையை தாராளமாக சாப்பிடலாம். இதனால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும். உலர் திராட்சையை வாங்கி நீர் விட்டு அலசி விட்டு அப்படியே மென்று சாப்பிடலாம். குடல் தொடர்பான நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும், மூலம் தொடர்பான தொல்லைகள் உள்ளவர்களுக்கும் திராட்சை மருந்தில்லா மருத்துவம்.

சந்தையில் எந்தவித திராட்சை கிடைத்தாலும் தயக்கமில்லாமல் வாங்கிச் சாப்பிடுங்கள்.அதிக மருத்துவ பலனை அடைய விதை உள்ள பன்னீர் திராட்சைக்கு முன்னுரிமை தாருங்கள்.

Leave a Comment