ஒரு நாளைக்கு எத்தனை முறை..?

Image

பாலியல் ஆரம்பப் பாடம்

ஆபாசப் படங்களில் ஒரு நபர் மீண்டும் மீண்டும் உறவு கொள்வதைப் பார்க்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களால் அப்படி செய்ய இயலவில்லை என்ற ஏக்கமும் சோகமும் வருகிறது. இது தேவை இல்லாத கவலை. ஒரு நாளைக்கு ஒரு முறை உறவு கொள்வதே போதும் என்கிறார்கள், செக்ஸாலிஜி மருத்துவர்கள்.

ஒரு முறை என்றாலும் அந்த உறவு குறைந்தது அரை மணி நேரமாவது நீட்டிக்க வேண்டியது அவசியம். இதன் அர்த்தம் அரை மணி நேரம் இயங்குவது அல்ல. ஏனென்றால், அத்தனை நேரம் ஆண்களுக்கு சாத்தியமாகாது. பாலியல் படங்களில் காட்டப்படுபவை எல்லாமே சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்பதால் அவை உண்மை அல்ல.

படுக்கையறையில் கிளுகிளுப்பாகப் பேசுவதும், முன் விளையாட்டுகள் மூலம் பெண்களைத் தயார்படுத்துவதும் ஆணின் கடமை. அதேபோல் ஆணை தொடர்ந்து இயங்கவிடாமல் ஓய்வு எடுக்கச் செய்வதும், வெவ்வேறு விதமாக உறவுக்குத் தூண்டுவதும் பெண்ணின் கடமை. அப்போது தான் இருவரும் சேர்ந்து உச்சகட்டம் அனுபவிக்க இயலும்.

அவசரம் அவசரமாக ஐந்து நிமிடங்களில் விளையாட்டை முடித்துவிட்டு, மீண்டும் ஒரு முறை உறவு கொள்ள நினைப்பது புத்திசாலித்தனமானது இல்லை. ஆண்களால் ஒரே நாளில் இரண்டுக்கு மேற்பட்ட முறை உறவு கொள்ள முடியும் என்றாலும் அவசர விளையாட்டுகளில் பெண்களுக்குத் திருப்தி கிடைப்பதில்லை. அதேபோல் வாரத்தில் எத்தனை நாட்கள் உறவு கொள்வது என்பதற்கெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் தேவை இல்லை. இருவருக்கும் விருப்பம் இருக்கும் நாட்களில் எல்லாம் உறவு கொள்ளலாம். நல்ல உறவுப் பிணைப்பு கொண்ட ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதே இல்லை.

Leave a Comment