உங்கள் நண்பருக்கு எத்தனை மதிப்பெண்..?

Image

குட்டி க்விஸ்


நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் மிகப்பெரிய பாக்கியம் என்பார்கள். இன்றளவும் பலரின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவருவதும், ஏமாற்றங்களை துரத்தி அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் இருப்பது நல்ல நண்பர்கள்தான். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் நண்பர்களை இணைப்பதில் தவறு ஏதும் இல்லை. துணைக்கு நண்பன் வந்துவிட்டால், நேரம்போவதே தெரியாமல் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறோம். நண்பர்கள் அதிகமாகக் கூடிவிட்டால் நம் முகத்தில் கவலை ரேகையே படியாது. நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது.

அப்படிப்பட்ட நல்ல நண்பர்களை அடையாளம் காண்பது அவசியம். இங்கிருக்கும் ஒவ்வொன்றும் ஒரு தகுதி. ஒவ்வொரு தகுதிக்கும் 10 மதிப்பெண்கள். உங்கள் ஒவ்வொரு நண்பரும் எத்தனை மதிப்பெண் பெறுகிறார்கள் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். 50க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெறுபவர்களுடன் அதிக நேரம் செலவழியுங்கள்.

* நண்பர்கள் என்பவர்கள்  ஜாதி, மத, இன மொழி எல்லைகளைக் கடந்து நம்முடைய எண்ணங்களின் வலிமையால் நம்மோடு பயணிப்பவர்கள்.
* நாம் செய்யும் எல்லாவற்றிற்கும் தலையாட்டும் பொம்மைகளாக இல்லாமல் நமது தவறுகளை தட்டிக் கேட்கும் தகப்பனாக மாறும் இயல்பை உடையவர்கள்.
* பெற்றோர்களிடமும் மற்ற உறவுகளிடமும் கூற இயலாத பலவற்றுக்குத் தீர்வு தரக்கூடியவர்கள்.
* சிக்கலான நேரத்திலும் என்றென்றும் பக்கத்திலேயே இருப்பவர்கள். அவர்கள்,  நம் உரிமைகளில் நம்மை ஆதரிப்பவர்கள்.
* உண்மையான நண்பர்கள், நாம் எதை இழந்தாலும் நம்முடன் ஒட்டியே இருப்பார்கள்.  

* நாம் செய்யும் தவறை சரிசெய்து, நம் உரிமைகளை மேம்படுத்துவார்கள். நாம் தடுமாறும் ஒவ்வொரு முறையும் அவர்கள் நம்மைப் பிடித்துக்கொள்வார்கள். * நாம் மிகவும் புத்திசாலித்தனமாக இல்லாதபோது அவர்கள் நம்மைச் சமநிலைப்படுத்துவார்கள்.
* நல்ல நண்பர்கள் நம்முடன் கனவு காண்பார்கள், கற்பனை செய்வார்கள், நாமும் அவர்களுடன் வளர்ந்து பூக்க முடியும்.
* நம்மைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் உண்மையான நண்பனிடம் பாதுகாப்பாய் இருக்கும்.

* நமது வளர்ச்சியைக் கண்டு பொறாமையும், போட்டியும் உண்மையான நண்பரிடம் இருக்காது.

நமது நண்பர்கள் இப்படியெல்லாம் எதிர்பார்க்கிறோம், நாமும் அதேபோன்று அனைவருக்கும் நல்ல நண்பனாக இருக்கவேண்டும் என்பதும் அவசியம்.

Leave a Comment