குட்டிக்குட்டி மருத்துவத் தகவல்கள்
- பாதங்களில் தீ பிடித்தது போன்ற எரிச்சலை ஒரு சில திடீரென சந்திப்பதுண்டு. நீரிழிவு, தைராய்டு பிரச்னையால் இப்படி ஏற்படலாம். மஞ்சளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து பாதங்களில் தடவினால் விரைவில் பலன் கிடைக்கும்.
- நுரையீரலில் சளி தொந்தரவு இருப்பவர்கள் துளசி இலையுடன் சிறு துண்டு இஞ்சியை மென்று உமிழ்நீரை மட்டும் விழுங்கிவந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
- அஜீரணக் கோளாறால் அவதிப்படுபவர்கள் நாலைந்து பூண்டை உரித்து வறுத்து சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில் செரிமானம் சீராகிவிடும்.
- தினசரி 7,000 அடி நடந்தாலே போதும் – புற்றுநோய், இதயநோய் போன்ற இந்த பிரச்னைகளின் அபாயம் குறையும் என்று புதிய ஆய்வில் தகவல்
- தமிழ்நாட்டில் ஐந்து வீடுகளில் இரண்டு வீட்டில் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டோர் உடல் பருமனுக்கு ஆளாகியிருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
- நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.
- நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம் பட்டால் வலி தெரியாது.
- சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.
- ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.