• Home
  • அரசியல்
  • அடேங்கப்பா ஆம்ஸ்ட்ராங் மீது இத்தனை வழக்குகளா?

அடேங்கப்பா ஆம்ஸ்ட்ராங் மீது இத்தனை வழக்குகளா?

Image

ஆயுதம் எப்போதும் ஆபத்து எல்லோருக்கும் ஆபத்து

அரசியல்வாதிகள் என்றாலே கட்டப்பஞ்சாயத்து செய்வதை ஒரு கெத்து என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கட்டப்பஞ்சாயத்து, ஆள் வைத்து மிரட்டுதல், கடத்துதல் போன்றவை மூலம் பணம் கொட்டலாம், ஆனால் உயிருக்கு எப்போதும் ஆபத்து இருக்கும். எனவே காந்தியின் பாதையில் சேவை செய்வதற்கு விரும்புபவர்கள் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும்.

தனக்கென ஒரு படையை வைத்துக்கொண்டு, தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை நடத்த முடியும் என்று நினைப்பவர்கள், எத்தனை பலமானவர்களாக இருந்தாலும், எத்தனை ஆட்கள் பக்கத்தில் இருந்தாலும், அவர்கள் என்ன செய்தார்களோ அதுவே திரும்பிவந்து அவர்களைத் தாக்கிவிடும் என்பதே உண்மை.

ஆம்ஸ்ட்ராங் ஒரு ரவுடி என்பதால் அவர் கொலையை அரசு வேடிக்கை பார்க்கலாம் என்பது அர்த்தமல்ல, ஒரு ரவுடியை அரசியல்வாதியாக உருவாக்குவதே மக்கள் தான். சின்ன ஆதாயம் அடைந்தவர்கள், ஆள் பலத்தைப் பார்த்து அவர்களை வளர்த்துவிடுகிறார்கள்.

கொலை செய்யப்பட்டிருக்கும் ஆம்ஸ்ட்ராங் சாதாரண நபர் இல்லை என்பதற்கு உதாரணமாக ஏராளமான வழக்குகள் அவர் மீது இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இத்தனை வழக்குகள் இருந்தாலும் ஒருவர் தலைவராக வெளியே உலவ முடிகிறது, அவர் மறைவுக்கு சென்னையே ஸ்தம்பிக்கிறது என்றால் நம் ஜனநாயகம் சரியான வழியில் தான் செல்கிறதா என்பது கேள்வியாகிறது.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மீது 3 கொலை முயற்சி வழக்குகளும் 4 பிற வழக்குகளும் என மொத்தம் 7 வழக்குகள் உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.  அதன் விபரம் பின்வருமாறு

1.திருவிக நகர் காவல் நிலைய குற்ற‌ எண் 696/2001 பிரிவு 147,148,341,336,420, 506(2)IPC

2.பெரவள்ளூர் காவல்நிலைய குற்ற எண் 248/2002 பிரிவு 341,307,506(2) IPC.

3..செம்பியம் காவல் நிலைய குற்ற‌ எண். 486/2002 பிரிவு 397,336,427,506(2) IPC. 4.செம்பியம் காவல் நிலைய குற்ற எண் .1182/2001 பிரிவு 341, 385,324,427,332,307, 506(2)IPC.

5..கீழ்பாக்கம் காவல் நிலைய குற்ற‌ எண் 822/2001 பிரிவு 148,452,341,395,397,398,511 IPC & 3 Indian Arms Act

6.கோயம்பேடு காவல் நிலைய குற்ற‌ எண் 1464/2008 பிரிவு 147,148,149,341, 294(b),506(2) IPC.

7..பூக்கடை காவல் நிலைய குற்ற‌ எண் 1371/2008 பிரிவு 147,148,341,323,307

Leave a Comment