பணக்காரர் எப்படி பெரிய பணக்காரர் ஆகிறார்..?

மணி மேனேஜ்மென்ட்

பணம் இருக்கிறவங்க கையிலே பணம் சேருதுன்னு சொல்றதைக் கேட்டிருப்பீங்க. உண்மை என்ன தெரியுமா..? ஏழை, கோடீஸ்வரர்ன்னு பணம் யாருக்கும் எந்த பாகுபாடும் பார்க்கிறது கிடையாது. ஏழைங்க பணத்தை விரட்டிக்கிட்டு ஓடுறாங்க. பணக்காரங்க பணத்தை தேடி ஓடுறது இல்லை, பணத்தை அவங்களை நோக்கி வரவழைக்கிறாங்க. பணத்தை எப்படி வரவழைக்கிறதுன்னு நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.  

  • ஏழைகள் தங்களுடைய உழைப்பையும் நேரத்தையும் விக்கிறாங்க. பணக்காரங்க அதை வாங்கிட்டு நேரத்தை மிச்சப்படுத்துறாங்க
  • ஏழைகள் விளம்பரங்களைப் பார்த்து பணத்தை செலவழிக்கிறாங்க. பணக்காரங்க அப்படி விளம்பரம் செஞ்சு பணம் சம்பாதிக்கிறாங்க.
  • திறமையான ஆட்கள் மூலம் பணக்காரங்க கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க. கூடுதல் சம்பளத்திலே திறமையான ஆட்கள் திருப்தி ஆயிடுறாங்க.   
  • எதிர்பாராத பணம் கிடைச்சா ஏழைகள் உடனே டி.வி. பைக்குன்னு வாங்குறாங்க. பணக்காரங்க அதையும் முதலீடு செய்றாங்க
  • ஏழைகள் உழைக்கலைன்னே பணம் வராது. பணக்காரர்கள் தூங்கும் நேரத்திலும் பணம் அவர்களுக்கு வட்டி கொடுக்கிறது.
  • திறமை இருந்தாலும் ஏழைகள் தொழில் தொடங்க யோசிப்பார்கள். திறமை இல்லை என்றாலுன் பணக்காரர்கள் ரிஸ்க் எடுப்பார்கள்.

சம்பளம் வாங்கி யாருமே கோடீஸ்வரனாக முடியாது என்பதை ஏழைகள் புரிந்துகொள்வதற்குள் அவர்களுக்கு ஓய்வு காலம் வந்துவிடுகிறது. ஆகவே, பணத்தை விரட்டாதீர்கள், வரவழையுங்கள்.

Leave a Comment