சாமுத்ரிகா இலக்கணம்…
ஒரு பெண் அழகாக இருப்பதை முகத்தைப் பார்த்துச் சொல்லிவிடலாம். அந்த பெண் ஆரோக்கியமாக இருக்கிறாரா, உடலை நன்றாக பராமரிக்கிறாரா என்பதை கண்டுபிடிக்கும் வழி என்ன தெரியுமா?
அவரது குதிகாலை பார்த்தால் போதும். அதில் பாதவெடிப்புகள் இருக்கிறது என்றால், அவர் முகத்தைப் பராமரிக்கும் அளவுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பவர் இல்லை என்று புரிந்துகொள்ள முடியும். பொதுவாக, சருமம் வறண்டு போகும்போது பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிக உடல் எடை, உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் ஏற்படுகிறது.
வேப்பிலையை அரைத்து பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இரவில் உறங்குவதற்கு முன், ஆலிவ் ஆயிலை பாதங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் மூன்றே நாட்களில் மாற்றத்தைக் காணலாம். எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவினால் வெடிப்பில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். வெதுவெதுப்பான நீரில் வினிகரைக் கலந்து அதில் கால்களை அரை மணி நேரம் ஊறவைத்துக் கழுவினால் இறந்த செல்கள் நீங்கும். வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள் சாக்ஸ் போட்டுக்கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடல் பருமனாக இருப்பவர்கள், எடையைக் குறைத்தால் மட்டுமே பித்த வெடிப்புகளை அகற்ற முடியும்.