நயன்தாரா ஜெயித்தது எப்படி..?

Image

நேரம் எனும் மந்திரம்

ஒரு விளம்பர படத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே நடிப்பதற்கு நயன்தாரா 2 கோடி ரூபாய் வாங்கினார் என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். பில்கேட்ஸ் தொடங்கி நம்மூர் அம்பானி வரையிலான பெரும் தொழிலதிபர்களின் ஒரு மணி நேர சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றும். அதே நேரம் வெயிலில் அமர்ந்து வியர்வை வழிய, கைகள் வலிக்க கல் உடைக்கும் ஒரு தொழிலாளியின் ஒரு மணி நேர சம்பளம் 10 ரூபாய்கூட கிடையாது. இந்த இரண்டு வகை மனிதர்களுமே உழைக்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும் கோடிகளில் பணம் குவிக்க, இன்னொருவர் ஏன் சில்லறைக்கே திண்டாடுகிறார்?

நயன்தாரா முதல் படத்தில் சரத்குமாருடன் நடித்தார். அதன் பிறகு ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், தொடர்ந்து இதை கடைப்பிடிக்காமல் இளம் நடிகர்களுடன் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். தன்னுடைய கேரியரை எப்படி துல்லியமாக மேல் நோக்கி கொண்டுசெல்ல வேண்டுமென திட்டமிட்டு செயலாற்றினார்.

ஹீரோயின் படங்களில் நடித்தது மட்டுமின்றி, திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்பதைக் காட்டி வருகிறார். தமிழில் தொடங்கிய நயன்தாராவின் கிராப் இப்போது இந்தி படவுலகம் வரை போய்விட்டது. தன்னுடைய நேரத்தை தன்னுடைய வளர்ச்சிக்காக பயன்படுத்தியதால் வெற்றிகரமான நடிகராகத் திகழ்கிறார்.

கல் உடைப்பதில் கிடைக்கும் வருமானம் போதும் என்ற மனப்பான்மையுடன் இருப்பதால், அந்த தொழிலாளி இன்னமும் அதே நிலையில் இருக்கிறார். அதனால் நேரத்தை சிறப்பாக நிர்வாகம் செய்து தன்னை வளர்த்துக்கொண்டவர் வெற்றி பெறுகிறார். நேரத்தின் அருமை தெரியாமல் உழைப்பவர் தோற்றுப்போகிறார்.

உலக மக்கள் அனைவருக்குமே ஒரு நாள் என்றால் 24 மணி நேரம் மட்டுமே. நயன்தாராவுக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான், கல் உடைக்கும் தொழிலாளிக்கும் அதே 24 மணி நேரம்தான். அந்த நேரத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் வெற்றி இருக்கிறது.

Leave a Comment