பாலியல் படம் பார்க்கும் பிள்ளையை எப்படி கட்டுப்படுத்துவது..?

பேரண்டிங் டிப்ஸ்

செல்போனைத் திறந்தாலே ஆபாசப் படங்கள் வந்து விழுகின்றன. இந்த காலகட்டத்தில் பிள்ளை ஆபாசப் படங்களைப் பார்த்தால், எப்படி ரியாக்ட் செய்வது என்று கற்றுத்தருகிறார் செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் கார்த்திக் குணசேகரன்.

“கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் என்று சிறுவர்களின் உள்ளங்கைகளுக்குள் ஆபாசப்படங்கள் வந்துவிட்டன. அதனால், உங்கள் பதின்ம வயது மகன் ஆபாசப்படம் பார்ப்பதைக் கண்ணெதிரே பார்த்துவிட்டீர்கள் என்றாலும், ஆத்திரப்படாதீர்கள்.

அவன் அதை விருப்பப்பட்டு, திட்டமிட்டுத்தான் பார்க்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்பதில்லை. நண்பர்களின் வற்புறுத்தலால் பார்க்க ஆரம்பித்திருக்கலாம். அல்லது நெட்டில் வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக ஆபாச வீடியோக்கள் கண்ணில் பட்டிருக்கலாம். அதனால், இந்த விஷயத்தைக் கொஞ்சம் நிதானமாக ஹேண்டில் செய்யுங்கள்.

`இது உன் கவனத்தை சிதறடித்துவிடும்; இதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் இதற்கு நீ அடிமையாகிவிடுவாய்; பிறகு உன் படிப்பு, வேலை, வாழ்க்கை எல்லாம் பாழாகிவிடும். இதற்கு இது வயது கிடையாது; இதிலிருந்து நீ மீண்டு வர நான் உனக்கு உதவி செய்வேன்’ என்று கோபப்படாமல் எடுத்துச் சொல்லுங்கள்.

இப்படிச் சொல்வதிலும் சில வழிமுறைகள் இருக்கின்றன. சில சிறுவர்கள், அதட்டினால் கட்டுப்பட மாட்டார்கள். சில சிறுவர்களை அதட்டித்தான் சீர்ப்படுத்த முடியும். உங்கள் மகன் எந்த ரகம் என்று உங்களுக்குத் தெரியும் என்பதால், அதற்கேற்றாற்போல அதட்டியோ, அன்பு காட்டியோ வழிக்குக் கொண்டு வாருங்கள்.’’ என்கிறார்.

Leave a Comment