டக்கர் ஜோக்ஸ்
.
”மசால் தோசை சாப்பிடக்கூடாதுன்னு ஏன் சொல்றீங்க டாக்டர்..?’’
“உங்க உடல் நல்லதுக்குத்தான். ஆமாம். இதுல என்ன சந்தேகம்?”
“பொறாமையில சொல்றீங்களோன்னு கேட்டேன்!”
————————-
”என் பொண்டாட்டிய என்னதான் செய்றதுன்னு தெரியல?”
”ஏன், என்ன பண்றாங்க?”
“நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.”
’’அப்படின்னா, கார் ஓட்டிப் பாரேன்”.
————————-
மாப்பிள்ளை வீட்டார்: ”பொண்ணு புடிச்சிருந்தாதான் சாப்பிடுவோம்”.
பெண் வீட்டார் : ”பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சாப்பாடே போடுவோம்.”.
……………….
நிப்பாட்டு..!
சர்தாரிடம் இண்டர்வியூவில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது; “கற்பனை செய்துகொள்ளுங்கள் சர்தார்ஜி…. நீங்கள் 15-வது மாடியில் இருக்கும்போது தீப்பிடித்துக்கொள்கிறது. எல்லோரும் தப்பிக்க முயல்கிறார்கள். ஆனால், வெளியேற வழியே இலை. நீங்கள் என்ன செய்வீர்கள்?”
அதற்கு சர்தார்ஜி, ”கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்” என்றார்.
————————-
பரிசோதனை நேரம்
சர்தார்ஜி ஒருவர் அடிக்கடி சமையல் அறைக்குச் செல்வதும், சர்க்கரை டப்பாவைத் திறந்து பார்ப்பதுமாக இருந்தார். அதைப் பார்த்து அவருடைய மனைவி, “ஏனுங்க அடிக்கடி சர்க்கரை டப்பாவைத் திறந்து பார்க்குறீங்க?” என்றார்.
அதற்கு சர்தார்ஜி, “டாக்டர் சொன்னதை மறந்துட்டீயா? அடிக்கடி சுகரை செக் செய்யச் சொன்னாரே?” என்றார்.