ஞானகுரு பதில்
கேள்வி : உடல் சக்திக்கு உணவு தேவைப்படுவது போன்று மனம் வலிமை பெறுவதற்கு என்ன தேவை..?
- ஏ.மாலினி தேவி, சசிநகர்.
ஞானகுரு :
சிந்தனைகளையே மனம் என்று சொல்கிறாம். மனம் சக்தி பெற வேண்டும், என்றால் நல்ல சிந்தனைகளை பாசிடிவ்வாக விதைக்க வேண்டும். பேராசை, ஒப்பீடு, அச்சம் இல்லாதவருக்கு வலிமையான மனம் கிடைக்கிறது.
அதேநேரம், உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனம் வலிமையாக இருக்கும். எனவே, உடல் வலிமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள், நல்ல சிந்தனைகளை வளருங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
