என்ன செய்தார் சைதை துரைசாமி – 392
வந்தாரை வாழவைக்கும் சென்னை நகர் யாரையும் ஏமாற்றியது இல்லை. உழைக்கத் தெரிந்தவர்களால் நிச்சயம் இங்கே பிழைத்துக்கொள்ள முடியும். அதேநேரம், தங்கும் இடம் மட்டுமே நிறைய பேருக்கு பிரச்னையாகிறது. எனவே, சாலையோரம் தங்கிவிடுகிறார்கள். இப்படி சாலையோரம் வசிக்கும் பரிதாபத்துக்குரிய மக்களுக்கும் வீடு கொடுக்கவேண்டும் என்ற கனிவும், சிந்தனையும் மேயர் சைதை துரைசாமிக்கு மட்டும்தான் ஏற்பட்டது.
சாலையோர மக்களுக்கு வீடு ஒதுக்கும் திட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கும் வீடு ஒதுக்க முடியும் என்ற நம்பிக்கை மேய சைதை துரைசாமிக்கு இருந்தது. இதற்காக, மாநகராட்சியில் இருந்து குடிசை மாற்று வாரியத்துக்கு இடம் ஒதுக்கிக்கொடுத்து உருவானதுதான், மூலக்கொத்தளம் குடியிருப்புத் திட்டம்.
சென்னையில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. சாலையோர மக்களையும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் ஊருக்கு வெளியே அனுப்பிவைத்தால், அவர்களால் சென்னைக்குள் திரும்பிவந்து வேலை பார்த்து திரும்புவது சிரமமாகிவிடும். எனவே, சரியான இடத்தைத் தேர்வு செய்வதற்கு விரும்பினார். இந்த நேரத்தில் தான் மூலக்கொத்தளம் இடுகாடு மேயர் சைதை துரைசாமி கண்ணில் பட்டது.
மூலக்கொத்தளம் சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 28 ஏக்கர் நிலத்தில் இருந்து 14 ஏக்கர் நிலத்தை குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைத்தார். அந்த இடத்தில் 1044 வீடுகள் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். இதில் 25% வீடுகளை சென்னை மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களுக்கு கொடுக்கவும் வழிவகை செய்தார்.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் சுரண்டுவதை தடுக்கும் வகையில் சைதையார் உருவாக்கிய மூலக்கொத்தளம் குடியிருப்புத் திட்டம் இப்போதும் அவருடைய கருணைக்கும் திட்டமிடலுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது.
- நாளை பார்க்கலாம்