சைனஸ்க்கு ஹோமியோவில் நிரந்தரத் தீர்வு!

Image

டாக்டர் இராம சுப்பிரமணியன்

ஆங்கில மருத்துவத்தில் சைனஸ் நோய்க்கு மீண்டும் மீண்டும் சிகிச்சை எடுக்கவேண்டிய சூழல் இருக்கும் நிலையில், ஹோமியோவில் நிரந்தரத் தீர்வுக்கு வழி காட்டுகிறார் மருத்துவர்.

சைனஸ் (Sinus) என்பது நெற்றி, கன்னத்து எலும்புகள், கண்கள் மற்றும் மூக்கின் பின்புறம் இருக்கும் காற்று நிரம்பிய வெற்றுப் பைகள் ஆகும்.  இந்த வெற்றுப் பைகள் மெல்லிய சளி சவ்வுகளால் வரிசையாக அமைந்துள்ளன. இந்த சவ்வுகள் சளியை உற்பத்தி செய்து, மூக்கு மற்றும் காற்றுப்பாதைகளைப் பாதுகாக்கின்றன.  வெளியில் இருந்து வரும் துகள்கள், தூசிகள் மற்றும் கிருமிகளைப் பிடித்து, நாசிப் பாதைகளில் இருந்து வெளியேற்ற உதவுகின்றன. 

‘சைனசைடிஸ்’ என்பது இந்த சைனஸ்களில் ஏற்படும் திசுக்களின் வீக்கம் அல்லது அழற்சியாகும். இது சளி அடைப்பு, முக வலி மற்றும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளுக்கு வழிவகுக்கும். இதுசைனஸ் தொற்று என்றும் அழைக்கப்படுகிறது.

 சைனசைடிஸ் ஒவ்வாமை, வைரஸ் தொற்றுகள் (குளிர் காய்ச்சல் போன்றவை), பாக்டீரியா, அல்லது பூஞ்சைகளால் ஏற்படலாம். சைனஸ்கள் வீக்கமடையும்போது, சளி அதிகமாக உருவாகி, நாசிப் பாதைகள் அடைப்புக்கு உள்ளாகின்றன. 

சைனசிடிஸின் அறிகுறிகள்: 

  • முகத்தில் வலி அல்லது அழுத்தம்,
  • சளி அடைப்பு அல்லது மூக்கடைப்பு, இருமல்,
  • தலைவலி, சில சமயங்களில் காய்ச்சல்கூட இருக்கும்.

கடுமையான சைனசிடிஸ்: 

இது ‘ரைனோசினுசிடிஸ்’ என்று அழைக்கப்படும். இந்த பாதிப்பு இருந்தால், ஜலதோஷம் பல வாரங்கள் நீடிக்கும்.

நாள்பட்ட சைனசைடிஸ்:

கடுமையான சைனசைடிஸ் சிலருக்கு நாள்பட்ட சைனசைடிஸாக மாறிவிடும். சைனஸ் சளிச்சுரப்பியில் கடுமையான வீக்கம் இருக்கும். கூடவே, வாசனை இழப்பும், முக வலியும்  இருக்கும்.

பூஞ்சை சைனசைடிஸ்:

இது பூஞ்சை உயிரினங்களால் ஏற்படும்.  சைனஸுக்குள் பூஞ்சை வளர்ந்து உள்ளுக்குள் வீக்கம் ஏற்படும். சளியும் வெளியேறும்.

பொதுவாக ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சைனசைடிஸ் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம். இதனால் சுவாசிக்க சிரமமாக இருக்கும். அதோடு இருமல்,  மூச்சுத்திணறல் ஏற்படும். இவர்களுக்கு புகை, தூசி போன்றவை சைனசைடிஸை அதிகரிக்கும். சைனஸ் தொற்றால்  உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் முயறையான கிச்சை பெறாவிட்டால் சிக்கலாகும்.

ஆஸ்டியோமைலிடிஸ்:

சைனஸில்  முற்றிய நிலை இது. சைனஸிலிருக்கும் பாக்டீரியா சுற்றியுள்ள நெற்றி எலும்புக்கு பரவலாம்.  இதனால் தலைவலி, காய்ச்சல், வீக்கம் ஏற்படும்.

சைனசிடிஸை எவ்வாறு தடுப்பது?

புகைபிடிக்கும் பழக்கமிருந்தால் அதை கைவிடவேண்டும்.

கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எவை எல்லாம் உங்களுக்கு  அலர்சியை ஏற்படுத்தும் என்பதை அறிந்து, அவற்றை தவிர்ப்பது நல்லது.

சிகிச்சை:

சைனஸை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தல் ஒரு சில வாரங்களிலேயே முழுமையாக குணப்படுத்திவிடலாம். நாள்பட்ட சைனசைட்டிஸுக்குக்கூட தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தால் பூரண குணம் பெறலாம்.

மற்ற மருத்துவ முறைகளைவிட, ஹோமியோ மருத்துவத்தில் மிக சிறப்பான மருந்துகள் சைனசைட்டிஸ் பாதிப்புக்கு  உள்ளன. ஹோமியோ டாக்டரின் பர்ந்துரையுடன் தொடர்ந்து ஹோமியோ மருந்துகளை உட்கொண்டு வந்தால், மீண்டும் சைனசைட்டிஸ் வராமல் முழுமையான விடுதலையை இந்தப் பாதிப்பிலிருந்து பெறலாம்.

Leave a Comment