திட்டப்பணிகளில் வரலாற்று சாதனை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 406

மேயர் பதவி ஏற்ற நாளில் இருந்தே பெருநகர சென்னையின் வளர்ச்சிக்கும், சென்னை மக்களின் நன்மைக்காகவும் தீவிரமாக இயங்கினார் மேயர் சைதை துரைசாமி. பகல், இரவு என்று பாராமல் அனைத்து நேரமும் சைதை துரைசாமிக்கு, மாநகராட்சி பற்றியே சிந்தனையும் செயலும் இருந்தது.

அதனால்தான், மேயர் சைதை துரைசாமி காலத்தில் திட்டப்பணிகள் செம்மையாக முடிக்கப்பட்டன. சென்னை மாநகராட்சியில் ஆதாரத்துடன் இருக்கும் திட்டப்பணிகள் பற்றிய தகவல்களை இங்கு கொடுக்கிறேன்.

1996 – 2001 காலத்தில் அறிவித்த வரவுசெலவு திட்டங்கள் – 159. இவற்றில் முடிக்கப்பட்ட அறிவிப்புகள் – 60. அதாவது இந்த காலத்தில் முடிக்கப்பட்ட பணிகள் 33.73% ,மட்டுமே

இதற்கடுத்து 2006 – 20011 மேயர் காலத்தில் அறிவித்த திட்டங்கள் – 606. இந்த காலத்தில் முடிக்கப்பட்ட அறிவிப்புகள் மொத்தம் 253. அதாவது இந்த காலகட்டத்தில் மேயரால் முடிக்கப்பட்டவை 41.75%

மேயர் சைதை துரைசாமி காலத்தில் அறிவித்த திட்டங்கள் மொத்தம் 419. இவற்றில் முடிக்கப்பட்ட அறிவிப்புகள்  மட்டும் 392 ஆகும். அதாவது மேயர் சைதை துரைசாமி காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் முடிக்கப்பட்டவை 93.55% ஆகும்.

சொன்னதை எல்லாம் செயல்படுத்திக் காட்டியவர் மேயர் சைதை துரைசாமி மட்டும் தான் என்பதை இன்றும் மாநகராட்சியின் பதிவுகளில் இருந்து அனைவரும் எளிதில் பார்த்து அறிந்துகொள்ள முடியும்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment