மருத்துவ விழிப்புணர்வு
அழகு, கவர்ச்சி போன்றவை கொஞ்ச காலம் மட்டுமே என்பது புரியாமல், இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.
தொடாமல் ரசிக்க வைப்பது அழகு. தொட்டுப் பார்க்கத் தூண்டுவது கவர்ச்சி. இதில் அழகாக இருக்க ஆசைப்படலாம். தவறே இல்லை. அது இயல்பான உணர்வு. ஆனால், இன்று பலர் தொட்டுப் பார்க்கத் தூண்டும் வகையில் எடுப்பாக இருக்கும் கவர்ச்சி மட்டுமே அழகு என்று நினைக்கிறார்கள்.
அதுவும் மார்பகம் விசயத்தில் இன்றைய நூற்றாண்டு நவநாகரிகப் பெண்கள் அபரிமிதமான கவர்ச்சியை விரும்புகின்றனர். பெண்களின் இந்தப் பேராசையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் அழகு மருத்துவர்கள் பெருத்துவிட்டார்கள்.
இவர்கள் தங்களை காஸ்மெடிக் சர்ஜன் என்று சொல்லிக்கொண்டு தங்களிடம் வரும் பெண்களிடம் கம்ப்யூட்டரில் விதவிதமான சைஸ்களில் மார்பகத்தை படம் போட்டுக் காட்டுவார்கள். இவர்கள் எதை விரும்புகிறார்களோ, அதேபோன்று வடிவமைத்துத் தருவார்கள்.
முதன்முதலாக இந்த மார்பகத்தை வடிவமைக்கும் ஆபரேசன் மிக முக்கியமான ஒரு காரணத்திற்காகத்தான் உருவானது. அதாவது மார்பகப் புற்று நோய் வந்தவர்களுக்கு, மார்பகத்தை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர்களுக்கு போலி மார்பகம் உருவாக்கத்தான் இந்த சர்ஜரி உருவானது. காலப்போக்கில் இது சிறுசை பெரிசாக்கும் விஷயமாக உருவெடுத்து இன்று வர்த்தகமாகிவிட்டது.
சிறுசை பெரிசாக்கும் இந்த ஆபரேஷனுக்கு Breast acugmentation Surgery என்று பெயர். இதன் மூலம் – இரண்டு மார்பகத்தில் ஒன்று சின்னதாக இருந்தால் அல்லது மார்பகம் தொங்கினால், மிகப்பெரிதாக இருந்தால் மறு சீரமைப்பு செய்ய முடியும்.
பிராவுக்குத் தகுந்த மாதிரிகூட இன்றைய நாளில் மார்பகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம். Laced Bra என்று ஒன்று வந்துள்ளது. இந்த பிரா சுருங்கும், விரியும் வலை மாதிரி வடிவில் இருக்கும். இதனை அணிந்து கொள்பவர்கள் கவர்ச்சியாக தெரிவார்கள். இதன் விலை ஏறக்குறைய ஒரு லட்சம். இந்த பிரா போட்டுக் கொள்வதற்கு ஏற்றாற்போல மார்பகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.
மார்பகத்தை சீர்படுத்தும் ஆபரேஷனில் இரண்டு வகை உள்ளது. ஒன்று பிரெஸ்ட் ஆகுமென்டேஷன் சர்ஜரி. இதில் மார்பகத்தில் இருக்கும் (anti-wrinkle operation) சுருக்கத்தை நீக்கிக் கொள்ளலாம்.
அடுத்து, பெரிதாக இருக்கும் மார்பகத்தை, தொங்கும் மார்பகத்தை சீர்படுத்திக் கொள்ளலாம். இன்னொன்று இம்ப்ளாண்ட் முறை. இம்முறையில் சிலிகான் பைகளை மார்பகத்தின் உள்ளே வைத்து தைப்பார்கள். இது சிறுசாக இருக்கும் மார்பகத்தை பெருசாக்கிக் காட்ட செய்யப்படுவதாகும். இந்த சிகிச்சையினால் பக்கவிளைவுகள் வரும் என்பதை மருத்துவர்கள் சொல்வதே இல்லை.
மார்பகத்தில் அடிக்கடி வலி எடுக்கும். விமானத்தில் பறக்கும்போது சிலிகான்பை விரி வடைவதால் மார்பகம் பயங்கரமாக வலிக்கும். மார்பகத்தில் தொற்றுக் கிருமிகள் வரலாம். மார்பகத்தை பெரிதாக்கிக் கொள்வதால் எந்தவிதமான மருத்துவப் பயனும் கிடையாது என்பதே உண்மை. சினிமா, டி.வி. உலகப் பெண்கள், அழகிப் போட்டியில் கலந்து கொள்பவர்கள். பாலியல் தொழில்புரிவோர் மற்றும் கவர்ச்சியை மூலதனமாகக் கொண்ட பெண்கள் எல்லாம் இதனை செய்து கொள்கிறர்கள்.
இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் மிக மிக சாதாரண எளிமையான ஆபரேஷன்தான். ஆனால், காஸ்மெடிக் சர்ஜன்கள் லட்சக்கணக்கில் இந்த விஷயத்திற்காக பணம் கறந்துவிடுவார்கள். சினிமா, டி.வி, அழகிப்போட்டி, பாலியல் தொழில் போன்றவற்றில் உள்ள மீடியேட்டர்கள், புரோக்கர்கள் மூலம் இந்த டாக்டர்கள் தங்கள் கவர்ச்சி வலையை விரிப்பார்கள்.
தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்து விடும் என்று நினைக்கிற பணக்கார பெண்கள் தான் இதுபோன்ற ஆபரேஷனை விரும்பிச் செய்து கொள்கிறார்கள். தாய்ப்பால் கொடுங்கள் என்று விளம்பரம் செய்ய வேண்டிய நிலை இருக்கிற போது, பல இளம் பெண்கள் திருமணத்திற்கு முன்பே இதுபோன்ற ஆபரேஷனை செய்துகொள்கிறார்கள். இவர்களால் திருமணத்திற்கு பின்பு இவர்கள் நினைத்தால்கூட தனது குழந்தைக்கு தாய்ப்பால் தரவே முடியாது.
ஆண்களையும் தங்கள் விளம்பர யுத்தியின் மூலம் சில டாக்டர்கள் கவர்ந்திழுக்கிறார்கள். சில ஆண்களுக்கு ஆண்குறி சிறிதாக இருக்கலாம். இது ஒரு குறைபாடு அல்ல. இவர்களால் தங்கள் மனைவியை நிச்சயமாக திருப்திபடுத்த முடியும். ஆனால் தவறான விளம்பரங்களைத் தந்து இவர்களிடம் பணம் கறந்துவிடுகிறார்கள்.
ஆண்குறியைப் பெரிதாக்கும் Phalo Plasty என்கிற ஆபரேஷனும், விந்து உற்பத்தியைத் தரும். Penal Implant எனும் ஆபரேஷனும் இன்று சில மருத்துவர்களால் செய்யப்படுகிறது. மருத்து ரீதியாக பார்த்தால், இது தேவையற்ற ஆபரேஷன் ஆகும்.
இது தவிர – போலி மருத்துவர்கள், மாற்று மருத்துவ முறையில் சிறிதாக இருக்கும் ஆண் குறியை நீங்கள் விரும்பும் வகையில் பெரிதாக்கிக் கொள்ளலாம் என்று பொய் விளம்பரம் தந்து லேகியம், உருண்டை, மூலிகை சூரணம் என்று கண்ட மருந்துகளைக் கொடுப்பதும் தடபுடலாக நடந்து வருகிறது.
இயற்கையாக படைக்கப்பட்ட மார்பகம், ஆண் குறி போன்றவற்றை ஆபரேஷன் மூலமோ, மருந்துகளின் மூலமோ பெரிதாக்கிக் கொள்ளும் மக்களின் மனநிலை மாற வேண்டும். கவர்ச்சியை விட ஆரோக்கியமே முக்கியம் என்று நினைப்பதுதான் புத்திசாலித்தனம்.
- பூமிநாதன்












