மனம் நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்

Image

புரிதல்

இறைவனும் மாயை என்று

ஒரு நாள் புரியும்.

அன்று நீங்கள்

கடவுளாகியிருப்பீர்கள்.

  • க்ருஷ்ண லட்சுமி

ஆசை

போதி மரங்கள்

விற்பனைக்கு….

ஆசையில்லாதவர்கள்

அணுகவும்…!

  • முருகானந்தம்

சும்மாயிரு

காற்றடிக்கும் திசையில்

பயணம்

சருகாயிருப்பதில்

சிரமமில்லை

  • பாலாஜி

Leave a Comment