நெஞ்சை உலுக்கும் கவிதைகள்

Image

கவித்துவம்

சில கவிதைகள் நெஞ்சை உலுக்கிவிடும், மீண்டும் மீண்டும் இம்சை செய்யும். அப்படிப்பட்ட சில கவிதைகள் இங்கே…

இம்புட்டுத்தான்…

ஒரு கனி

ஒரு இலை

உதிர்ந்தன பழுத்து.

மண்ணோடு கலந்த வழியில்

ஒன்று மரம்

ஒன்று உரம்

  •  ராஜ சுந்தரராஜன்

சுயநலமி

வீட்டுக்குள் வராத அளவிற்குப்

பெய்யும் வரை தான்

மழைமேல் காதல்,

ரசனை,

சூடாக டீ,

காப்பி, வெங்காய பஜ்ஜி,

இளையராஜா பாடல் எல்லாமே.

  • பிரபாகரன் சேரவஞ்சி

சமம்

குடித்துவிட்டு

பாட்டில்களை

வீசி எறிபவனுக்கும்

வாழ்க்கையிருக்கிறது.

எறியப்பட்ட

பாட்டில்களைப் பொறுக்குபவனுக்கும்

வாழ்க்கையிருக்கிறது..

இப்பூமியில்…!!

  •  சௌவி

கேளுங்கள்

ஒன்றுமில்லை…

கைப் பிடித்து கண்ணீர் மல்கினார்

அந்தப் பெரியவர்,

நான் எந்தப் பேருதவியும்

செய்துவிடவில்லை அவருக்கு.

சற்று அவர் பேசுவதைக்

கேட்டுக்கொண்டிருந்தேன்.

 – ரமணி முருகேஷ்

இயல்பு

அன்பை மட்டும்

வெளிக்காட்டத் தெரிந்திருந்தால்

ஆண்கள்

கடவுளுக்கும் மேலாக

கொண்டாடப் பட்டிருப்பார்கள்

  • ஆதிவா

Leave a Comment