நெகிழ வைக்கும் கவிதைகள்

Image

வரிசை 4

சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. அப்படி சில கவிதைகள் இங்கே

காத்திருப்பு

மரணம்
அலுப்பாக இருக்கிறது.
ஒரு நாளுக்காக
இன்னும் எத்தனை நாள்தான்

 காத்திருப்பது?
– தபசி


இது தானா..?

 
சிறியதை விழுங்கப் பெரியது
அதனை விழுங்க
மற்றொன்று
இடையில் மிதக்கும்
நதியிலை
என்றபடி கடக்கும்
காலத்தின் கால் தடத்தைத்தான்
நீங்கள் வாழ்க்கை
என்று கூறித் திரிகிறீர்கள்.

  • இனியவன் காளிதாஸ்

Leave a Comment