என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 72
அரசியல் வாழ்வு, பொது வாழ்வு போலவே தனிப்பட்ட வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் சைதை துரைசாமி.
ஆரோக்கியம் என்பது தனிமனிதரின் உடல் நலன் சார்ந்தது மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புடையது. மேலும், அது ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதாவது ஒரு தனி மனிதரின் ஆரோக்கியத்தில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தார்மீக முன்னேற்றமும் அடங்கியுள்ளதால் குடிமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு என்று அழுத்தமாக நம்புபவர் சைதை துரைசாமி.
பொதுவாக ஒருவரது ஆரோக்கியமானது உணவு, உடல்சார்ந்த ஒழுக்கம், உடற்பயிற்சி, யோகப்பயிற்சி, சுற்றுச்சூழல், உடல் முதிர்ச்சி, மனம், மரபணுக்கள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அமைகிறது என்றாலும் எல்லோரும் நோயற்ற வாழ்வுக்கே ஆசைப்படுகிறார்கள். எனவே ஒருவரிடம் பணம், செல்வாக்கு, புகழ் குவிந்திருப்பது மட்டும் போதாது, அவற்றை அனுபவிப்பதற்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். ஆரோகியமே நல்ல வாழ்க்கையின் அடிப்படை என்பதை நன்கு உணர்ந்தவர் சைதை துரைசாமி.
60 வயதுக்குப் பிறகே பெருநகர சென்னைக்கு மேயராகத் தேர்வு செய்யப்பட்டார் சைதை துரைசாமி. அப்போதும் இப்போதும் தினமும் 19 மணி நேரம் இடைவிடாது உழைக்கிறார் என்றால், இயற்கை உணவு மற்றும் யோகப்பயிற்சி துணையுடன், அவர் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதே காரணம்.
உணவு சாப்பிடுவதற்குப் போதிய நேரம் ஒதுக்கி நன்றாக மென்று சாப்பிடுவது, போதுமான அளவு நீர் பருகுவது யோகப் பயிற்சி செய்வது போன்றவற்றை எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டார். அதனாலே இன்றும் இளமையாக வாழ்ந்து வழிகாட்டி வருகிறார் சைதை துரைசாமி.
தன்னைப் போன்று மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ்வதும், நோய்களில் இருந்து விடுதலை பெறுவதே உண்மையான சுதந்திரம் என்று விரும்பினார் சைதை துரைசாமி. அதனால் தான் பெருநகர சென்னை மேயராக அமர்ந்தவுடன் மக்கள் சேவைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போலவே மக்கள் நல வாழ்வுக்கும் முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்கள் வகுத்தார்.
- நாளை பார்க்கலாம்.