என்ன செய்தார் சைதை துரைசாமி – 396
அரசு பள்ளிகளை விட மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக வசதிகள், கூடுதல் வாய்ப்புகள் பெற்றுத்தரவேண்டும் என்பதற்காக மேயர் சைதை துரைசாமி அதிகமான முயற்சிகள் எடுத்துக்கொண்டார். மாணவர்களுக்கு எப்படிப்பட்ட வாய்ப்புகள், வசதிகள் தேவைப்படுகிறது என்றெல்லாம் பார்த்துப் பார்த்து உதவிகள் செய்தார்.
மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சூழல்களில் நகல் எடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. இதற்காக ஆசிரியர்களும், மாணவர்களும் வெளியே சென்று நகல் எடுப்பதை அறிந்தார் மேயர் சைதை துரைசாமி. உடனடியாக மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நகல் எடுப்பதற்கு ஜெராக்ஸ் மிஷின் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார் மேயர் சைதை துரைசாமி. இதனால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நகல் எடுப்பதற்காக அலைவது தடுக்கப்பட்டது.
அதேபோன்று மாணவர்கள் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி. ஆரோக்கியமே உடலின் மூலதனம் என்பதும் உடல் நலனுடன் இருந்தால் மட்டுமே பாடங்களை கவனம் எடுத்துப் படிக்க முடியும் என்பதையும் மேயர் சைதை துரைசாமி நன்கு அறிவார். அதோடு நோய் வந்த பிறகு மாணவர்களைக் காப்பாற்றுவதை விட, நோய் வரும் முன்னதாகவே அறிந்துகொண்டால், எளிய சிகிச்சையில் நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதை அறிவார்.
எனவே, மாணவர் உடல் நலனைப் பாதுகாப்பதற்கு ஆரோக்கிய அட்டையைக் கொண்டுவந்தார். அதன்படி மாநகராட்சியின் சுகாதாரத்துறையால் தயாரிக்கப்படும் அட்டைகளை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் இதயம், கண் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை பரிசோதனை செய்து, முடிவுகளை பதிவு செய்யவும், குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மேயர் சைதை துரைசாமியால் தீர்மானம் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மாணவர்களின் ஆரோக்கியத்திற்காகவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
மாணவர் நலனில் மேயர் சைதை துரைசாமி எத்தனை தூரம் அக்கறையாக இருந்தார் என்பதை அறிவதற்கு இந்த ஒரு நடவடிக்கையே போதும்.
- நாளை பார்க்கலாம்.