மாணவர்களுக்கு சுகாதார அட்டைகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 167

பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி பதவியேற்ற நேரத்தில் அவருக்கு 60 வயது. அந்த வயதிலும் இளமைத் துள்ளலுடனும் புத்துணர்ச்சியுடனும் இருந்தார். அதோடு தினமும் 19 மணி நேரம் சுறுசுறுப்பாக உழைக்கவும் செய்தார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் உடல் நலனில் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை. உடல் ஆரோக்கியமே ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமான சொத்து என்பதில் சைதை துரைசாமி மிகவும் உறுதியாக இருப்பார்.

உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் அறிந்தவர் என்பதால் மாணவர்களுக்கும் அந்த புரிதலை உருவாக்குவதற்கு விரும்பினார். நோய் வந்த பிறகு சிகிச்சை எடுப்பதை விட நோய் வராமல் பாதுகாப்பதே முக்கியம் என்பதை நன்கு அறிவார். தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு எவ்வித உடல்நலக் குறைபாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விரும்பினார்.

எனவே, சைதை துரைசாமியின் ஆலோசனைப்படி மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு என பிரத்யேக சுகாதார அட்டைகள் வழங்குவதற்கு மாநகராட்சியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார். அதன்படி மாநகராட்சியின் சுகாதாரத் துறையினால் தயாரிக்கப்படும் அட்டைகள் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட்டன.

இந்தத் திட்டத்தின் மூலம் மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களின் உடல் நலனும் பரிசோதனை செய்யப்பட்டன. குறிப்பாக மாணவர்களின் இதயம், கண், காது போன்ற உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியவும், அப்படி ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஏராளமான மாணவர்களுக்கு கண் பார்வையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குறை இருப்பது அறியாமலே நிறைய மாணவர்கள் சிரமத்துடன் படித்திருக்கிறார்கள். கண்ணில் குறை தென்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டன. தங்கள் பிள்ளையை பாதுகாப்பது போன்ற அக்கறையை ஒவ்வொரு மாணவர் மீதும் சைதை துரைசாமி எடுத்துக்கொள்கிறார் என்று அத்தனை பெற்றோரும் மனதாரப் பாராட்டி வாழ்த்தினார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment