- வாயை மூடி சிரிக்கவும்
டாக்டர் என்றாலே சீரியஸா பார்க்க வேண்டியதில்லை. படிச்சதில் பிடிச்ச டாக்டர் ஜோக் இது. நம்ம ஆள் ஒருத்தர் வேலை கிடைக்காத காரணத்தால் ஒரு மருத்துவமனை ஆரம்பித்து மருத்துவர் ஆகிடலாம்னு நினைச்சார். உடனே வேலையிலும் இறங்கிட்டார்.
வாசல்ல பெருசா ஒரு போர்டு வெச்சார்.. எந்த நோயா இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும் நோய் சரியாகவில்லை எனில் 1000 ரூபாய் திருப்பி அளிக்கப்படும்.
இவர் போலி டாக்டர் னு தெரிஞ்ச ஒருத்தர் இவர் கிட்ட எப்படியும் 1000 ரூபாய் புடுங்குற ஆசையில் அந்த மருத்துவமனைக்கு போனார்.
முதல் சந்திப்பில் :
இவர் : டாக்டர் என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல
மருத்துவர் :நர்ஸ் அந்த 10 ம் நம்பர் பாட்டில் ல இருக்க மருந்த எடுத்து இவரு வாயில 5 சொட்டு விடுங்க
(நர்ஸ் மருந்து விட்டதும் )
இவர் :ஐயோ டாக்டர் இது பெட்ரோல் ஆச்சே
மருத்துவர் :வெரி குட்.. மருந்து வேலை செய்யுது. உங்களால இப்போ சுவை உணர முடியுது எடுங்க பீஸ் 500.
இவர் :(வேற வழியில்லாம குடுக்குறாரு 500)
இரண்டாவது சந்திப்பில் :
இவர் :டாக்டர் எனக்கு மறதி ரொம்ப அதிகமா இருக்கு குணப்படுத்துங்க
மருத்துவர் :நர்ஸ் அந்த 10 ம் நம்பர் பாட்டில் ல இருக்க மருந்த எடுத்து இவரு வாயில 5 சொட்டு விடுங்க.
இவர் :டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே
மருத்துவர் :வெரி குட் உங்க மெமரி பவர் திரும்ப வந்திருச்சு எடுங்க பீஸ் 500..
இவர் :500 குடுக்குறாரு
மூன்றாம் சந்திப்பில் :
(எப்படியும் 1000 ரூபாய் வாங்கிறணும் னு இவர் போகிறார் )
இவர் :டாக்டர் எனக்கு கண்பார்வை சரியில்ல குணப்படுத்துங்க
டாக்டர் :சாரி… என்கிட்ட கண்பார்வை குணப்படுத்த மருந்து இல்லை இந்தாங்க 1000 ரூபாய்.
இவர் :டாக்டர் இது 500 ரூபாய் ஆச்சே பதறினார்.
டாக்டர் :வெரி குட். உங்க பார்வையும் நல்லா ஆகிடிச்சி. எடுங்க 500ரூபாய்.
கருத்து :பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழச்சிக்குவான்….