ஆட்டிசம் நாள்
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி ஆட்டிசம் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை மதியிறுக்கம் என்று தமிழில் சொல்லலாம். மூளையின் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு என்று சொல்லாமே தவிர, இது ஒரு நோய் அல்ல. மரபணுக்கள், தடுப்பூசிகள், கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்பட்ட நோய்த் தாக்குதல்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் வரை எத்தனையோ காரணிகள் யூகிக்கப்பட்டாலும் துல்லியமாக இதுதான் ஆட்டிசத்துக்கான காரணம் என்று எதுவும் நிரூபணமாகவில்லை.
கர்ப்பத்தில் இருக்கும் போது எம்.ஆர்.ஐ, சி.டி.ஸ்கேன், இ.சி.ஜி.எனப் பல்வேறு சோதனைகளில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காண இயலாது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்த 6 மாதத்திற்குப் பிறகே அறிகுறிகள் தென்படுகின்றன.
தாயின் முகத்தை அடையாளம் காண முடியாமை, கண் நோக்கி கண் பார்க்காமல் இருத்தல், மழலையின் ஒலி எழாமல் இருப்பது, அருகில் நின்று கூப்பிட்டாலும் எந்த சலனமும் இல்லாமல் இருப்பது, பொம்மைகளோடு விளையாட மறுத்தல், கைகளில் ஒரு தன்மை இல்லாமல் போன்றவை ஆட்டிசம் நோயின் அறிகுறிகள் என்றாலும் நிறைய பேரால் இவற்றை இனம் காண முடிவதில்லை..
இந்மேலும் இந்நோய்க்கு முறையான சிகிச்சை முறையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் இன்னும் 2 ஆண்டிற்குள் ஆட்டிசம் நோயை குணப்படுத்தும் சிகிட்சை முறை கண்டுபிடிக்கப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றார்கள்.
நோய் அல்ல குறைபாடு
இதனை ஸ்பெக்ட்ரல்டிஸ் ஆர்டர் (spectral-order) என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் PDD, Asperger, Autism என இதில் பல வகைகள் இருக்கின்றன. எனவே, இதை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்’ (Autism Spectrum Disorder – ASD) என்கிறது மருத்தவ உலகம். இந்தக் குறைபாட்டின் தீவிரத்தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுவேறு மாதிரியாக இருக்கும். எனவே, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் திறமையும் சரி, சிக்கல்களும் சரி தனித்துவமானவை.
ஆட்டிசத்தை ஏடிஎச்டி என்றும் கூறுகிறார்கள். இது ஆண், பெண் இரு பாலினக் குழந்தைகளுக்கும் வரக்கூடும் என்றாலும், ஆண் குழந்தைகளுக்கே அதிகம் வரக்கூடியது. அதாவது, 10 ஆண் குழந்தைகளுக்கு 1 பெண் குழந்தை வீதம் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இதன் அறிகுறிகளை 3 – 4 வயதில் பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும், மற்றவர்களும் கண்டுபிடிக்கிறார்கள்.
இதன் பாதிப்புகள் எப்படியிருக்கும்..?
1. கவனம் மட்டும் இல்லாமல் இருப்பது (attention deficient disorder)
2. மிகையியக்க செயல்பாடு (hyper activity disorder)
3. இவை இரண்டின் கலவை (attention deficient hyperactive disorder).
இந்த குறையினால் பாதிக்கப்பட்டவர்கள் ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்கு காரணமின்றி சுற்றித் திரிவார்கள். ஒரு விளையாட்டுப் பொருளில் அல்லது ஒரு விளையாட்டில் அதிகபட்சம் 2 – 3 நிமிடங்கள் கூட கவனம், நேரம் செலுத்த மாட்டார்கள். ஆனால், அதுவே அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருள் என்றால் அதை விளையாடி முடிக்கும் வரை அவர்கள் கவனம் முழுதும் அதில் இருக்கும். பெரும்பாலும் தாமதமாக தூங்கி சீக்கிரம் எழுந்துவிடுவார்கள். எந்நேரமும் சுறுசுறுப்புடன் இயங்குவார்கள்.
ஓரிடத்தில் அதிக நேரம் அமர்ந்திருக்க மாட்டார்கள். உணவு உண்ணும் போதும், வீட்டு பாடம் படிக்கும் போதும் அதீத ஆற்றலோடு இயங்குவதால், தினசரி வேலைகளான குளிக்க வைப்பது, சரியான நேரத்தில் பள்ளிக்கு கிளப்புவது என அனைத்தும் சிரமமான ஒன்று.
இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள், சமூகத்தில் மற்றவர்களோடு தொடர்புகொள்ளும் திறன் (Communication), கலந்து பழகும் திறன் (Socialization) போன்றவற்றில் பின்தங்கியிருப்பார்கள்.
தீர்வுகள்
ஆட்டிசம் என்பது குறைபாடுதான், நோயல்ல. எனவே, அந்தக் குறைபாட்டின் தன்மையிலிருந்து மேம்படுத்த மட்டுமே முடியும். தொடர்ந்து பயிற்சிகள் கொடுப்பதன் மூலம், ஆட்டிச நிலையிலிருக்கும் ஒரு குழந்தையின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவ முடியும். எப்படி சர்க்கரைநோய் (Diabetes) ஒருவருக்கு வந்துவிட்டால் அதை முற்றிலும் குணப்படுத்த முடியாதோ அதைப்போலத்தான் ஆட்டிசமும்.
வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயைச் சமாளித்து ஆரோக்கியமாக வாழ முடியும். அதைப்போலவே ஆட்டிச பாதிப்பின் தீவிரத் தன்மையையும், அந்தக் குழந்தையின் திறன்களையும் சரியாகக் கண்டறிந்து, அதற்கேற்ப பயிற்சிகள் அளிப்பதன் மூலம் இவர்களும் மற்ற குழந்தைகளைப் போலவே நிகரான வாழ்வை வாழலாம்.
அதிகப்படியான நடத்தைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆட்டிச நிலையாளர்களுக்கு அவர்களின் ஆக்ரோஷம் – பொங்குசினத்தைக் குறைப்பதற்கான மருந்துகள், தூக்கத்தைச் சீராக்குவதற்கான மருந்துகள் போன்றவற்றையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குழந்தையைச் சரியாக, தொடர்ச்சியாக அவதானித்து அதற்கேற்ப பயிற்சி முறைகளை வடிவமைத்துக்கொள்ளும் நெகிழ்வுத் தன்மை, குறைபாட்டைக் கண்டறிந்து பயிற்சிகளை ஆரம்பிக்கும் வயது ஆகிய காரணிகளைப் பொறுத்தே நமக்குக் கிடைக்கும் முன்னேற்றமும் இருக்கும்.
அன்றாட வாழ்வியல் செயல்களைப் பயிற்றுவிக்கவும், சென்சரி சிக்கல்களைத் தீர்க்கவும் ஆக்குபேஷனல் தெரபி (Occupational Therapy), பேச்சுப்பயிற்சி (Speech Therapy), சிறப்புக் கல்வி வழி கற்பித்தல் ( Social Education) போன்றவை முக்கியமாகத் தேவைப்படும். யோகா, இசை போன்ற மேலதிகப் பயிற்சிகளும் இவர்களுக்கு நல்லது. முக்கியமாக, குழந்தைகளின் பெற்றோர் தெரபிஸ்டுகளிடம் ஆலோசனைப் பெற்று, வீட்டில் செய்யவேண்டிய பயிற்சிகளைக் கட்டாயம் செய்ய வேண்டும்.
வீட்டு வேலைகளிலும் வயதுக்கேற்ப இந்தக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். தினசரி வேலைகளான (Activities for Daily Living) பல் தேய்த்தல், குளித்தல், கழிவறை சென்று வந்த பின்னர் சுத்தம் செய்துகொள்வது போன்றவற்றையும் சிறு வயதிலேயே இந்தக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் தன்னிச்சையான வாழ்வை வாழச் செய்யலாம்.
ஆட்டிசம், தொட்டால் ஒட்டிக்கொள்ளும் நோய் அல்ல. அச்சமின்றி அவர்களுடன் கை கோத்து, நாம் எல்லோரும் பயணம் செய்ய வேண்டும்.