எடப்பாடி பழனிசாமியின் 70வது ஆண்டு பிறந்த நாள் இன்று தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நபர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தாலும் அண்ணாமலையின் வாழ்த்து முக்கியமாக பார்க்கப்படுகிறது.
தமிழக முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தெரியும்? எடப்பாடி பழனிசாமி மீதும் ஊழல் புகார்களை வெளியே கொண்டுவருவேன் என்றெல்லாம் பேசியவர் அண்ணாமலை. தமிழக பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் கூட்டணி உடைந்தது.
இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்து நின்று ரொம்பவே சிரமப்பட்டது. அதனாலே தானாக முன்வந்து வாழ்த்து கூறியிருக்கிறார் அண்ணாமலை என்கிறார்கள்.
இந்த நிலையில் சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அளித்த புகாரின்பேரில் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு. அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிபிடத்தக்கது.