வரிசை 2

- தோல்வியில் இருந்து எதையும் நீங்கள் கற்கவில்லை என்றால், வெற்றி என்பது எட்டாக்கனி தான்.
- உங்களை விட்டு விலகியதை மீண்டும் பெற ஆசைப்பட்டால் விரட்டிச் செல்லாதீர்கள். தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள் தானே திரும்ப வரும்.
- நீங்கள் தவறு செய்ததே இல்லை என்றால், புதிய முயற்சி எதுவும் செய்துபார்க்கவில்லை என்று அர்த்தம்.
- அழகை அனுபவிக்க சுற்றுலா போகவேண்டும் என்று பணம் சேர்க்காதீர்கள். உங்களைச் சுற்றியே கொட்டிக் கிடக்கிறது அழகு.
- பூவாக இருக்க விரும்பாதீர்கள், பூ பூக்கும் செடியாக மாறுங்கள்.
- சிரமங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் உள்ளம் கிடைத்துவிட்டால், எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியும்.
- ஒரு மில்லிமீட்டர் அளவு புன்னகை போதும், நீங்கள் நினைக்கமுடியாத அளவுக்கு நம்பிக்கை கிடைத்துவிடும்.