நிலவேம்புக் கஷாயத்துக்கு பச்சைக் கொடி

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி 421

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் கஷாயமும் பப்பாளி இலைச்சாறும் ஆற்றலுடன் செயல்படும் என்ற நம்பிக்கை சித்த மருத்துவர்களுக்கும் மேயர் சைதை துரைசாமிக்கும் முழுமையாக இருந்தது. ஆனால், இந்த நம்பிக்கை மட்டும் மக்களுக்குப் போதாது.

அதனாலே, கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு நிலவேம்புக் கஷாயம் மற்றும் பப்பாளி இலை சாறு ஆகிய இரண்டையும் பரிசோதனைக்கு அனுப்பி ஆய்வு முடிவுகளுக்குக் காத்திருந்தார்.

மேயர் சைதை துரைசாமியின் நம்பிக்கை வீண் போகவில்லை. மேயர் சைதை துரைசாமி ஆசைப்பட்ட வகையில் ஆய்வு முடிவுகள் வந்தன.

கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனம் முழுமையாகப் பரிசோதனை செய்து, ‘டெங்கு நோய்க்கு எதிராக நிலவேம்பு மற்றும் பப்பாளி இரண்டுமே வீரியத்துடன் நன்கு செயல் புரிகிறது, இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

சின்னக் குழந்தையில் இருந்து முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்த முடியும். நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, நோய் பாதிப்பு இல்லாதவர்களும் இதனை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை போன்று எடுத்துக்கொள்ள முடியும் என்று உறுதி அளித்தது,

கிங் ஆய்வு நிறுவனம் கொடுத்த சான்றிதழ் மேயர் சைதை துரைசாமிக்கு மிகவும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொடுத்தது. இதனை உடனடியாக அனைத்து மக்களுக்கும் கொண்டுசெல்வதற்கான பணியில் இறங்கினார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment