சக்தி குழுமத்தின் மகத்தான பாராட்டு

Image

எஸ்.கே.முருகன் எழுதிய நெருப்பூ

டிஜிட்டல் உலக பரபரப்பிலும் புத்தகங்கள் படிப்பதற்கும், பாராட்டுவதற்கும் நேரம் ஒதுக்குபவர்கள் இருக்கவே செய்கிறார்கள். பிரபல தொழிலதிபராக மட்டுமின்றி மாற்று மருத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மருத்துவச் செலவைக் குறைக்கும் வகையில் வெல்னஸ் கிளினிக் நடத்திவரும் சக்தி குழும நிர்வாக இயக்குனர் மாணிக்கம் மகாலிங்கத்தின் பாராட்டு மதிப்புக்குரிய ஒன்று.

எஸ்.கே.முருகன் எழுதியிருக்கும் நெருப்பூ – இதிகாச நாவலுக்கு அவரது பாராட்டுகளிலிருந்து சில வரிகள்.  

’’….. நம் தேசத்தின் இரண்டு பெரிய இதிகாசங்கள் இராமாயணம், மகாபாரதம். இவற்றில் மகாபாரதம் எண்ணற்ற சம்பவங்கள், கிளைக் கதைகள் கொண்ட மிகப் பெரும் சமுத்திரம். மகாபாரதத்தில் நம்மால் மறக்க முடியாதபடி அழுத்தமாகப் படைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் தனித்தன்மை கொண்டவள் அம்பை. அவள் பிறரை மட்டுமல்ல, தன்னையும் எரித்துக் கொள்ளும் நெருப்பு. அம்பையின் வாழ்க்கையை ஓவ்வோர் அத்தியாயத்திலும் பரபரப்பும், விறுவிறுப்புமாக படைத்திருக்கிறார் எஸ்.கே.முருகன்…’’

இந்த புத்தகம் ஞானகுரு பதிப்பகம் வெளியீடு.

ஞானகுரு பதிப்பகம், ஜி2, கோவிந்த் அபார்ட்மென்ட், 6 ஏஜிஎஸ் காலனி 4வது குறுக்குத்தெரு, கொட்டிவாக்கம், சென்னை – 600041

வண்ணப் புத்தகம் – 600 ரூபாய், கருப்பு வெள்ளை – 300 ரூபாய், இ-புக் – 150 ரூபாய்

80725 89355 செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்

வங்கிக் கணக்கிலும் பணம் அனுப்பலாம்.

GYANAGURU PUBLICATION, UNION BANK OF INDIA, IFS CODE : UBIN0554847, Current Account No. 548401010050639

Leave a Comment