• Home
  • யாக்கை
  • வயிற்று வலிக்கு பாட்டி வைத்தியம்!

வயிற்று வலிக்கு பாட்டி வைத்தியம்!

Image

இயற்கை ஆரோக்கியம்

பொதுவாக வயிற்று வலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.  செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை, பூச்சித் தொல்லை, வயிற்றுப் பொருமல், உணவு நச்சு போன்றவை முக்கியமான காரணங்கள். சாதாரண வயிற்று வலிக்கு உடனே மருத்துவரை சந்திக்க அவசியம் இல்லை. கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். அது சரிவரவில்லை என்றால், உடனே மருத்துவரை சந்திக்கலாம். இதோ, சில எளிமையான பாட்டி வைத்தியங்கள்.

சீரக நீர்

 ஒரு பாத்திரத்தில் ஒரு சொம்பு அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். அதில் கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டு, நன்கு கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டியைக் கொண்டு தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். இந்த தண்ணீரை அருந்தி வர, வயிற்று வலி குணமடையும்.

வேப்பம்பூ

வேப்பம்பூவைப் பறித்து வெயிலில் காய வைக்கவும். பின் இதனைத் தூளாகப் பொடித்துக் கொள்ளவும். இதை வெந்நீரில் கலந்து காலை மாலை என இருவேளையும் பருகி வரலாம். இதைச் செய்து வரும் பொழுது வாயு தொல்லையால் ஏற்பட்ட வயிற்று வலி குணமடையும்.

 சுக்கு

 சோம்பு அரைக் கப், தனியா கால் கப் மற்றும் சுக்கு ஒரு சிட்டிகை என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் மிக்சியிலோ அல்லது அம்மியிலோ போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பாத்திரத்தில் ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றிக் கொண்டு, பொடியைச் சேர்த்து விடுங்கள். இதை நன்கு கொதிக்கவிடவும். அரை சொம்பு அளவிற்குத் தண்ணீர் சுண்டியவுடன், இதில் பனை வெல்லமும் பாலும் சேர்த்து அருந்த வேண்டும். இது மலச்சிக்கலைக் குணமடையச் செய்யும்.

 கசகசா

ஒரு தேக்கரண்டி அளவு கசகசா மற்றும் சிறிதளவு பனங்கற்கண்டையும் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் அரைத்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
இதைத் தினம் மூன்று வேளை எடுத்துக் கொள்வதன் மூலம் வயிற்று வலி நிவாரணம் அடையும்.

Leave a Comment