• Home
  • யாக்கை
  • ஜீரணக் கோளாறுக்கு  பாட்டி வைத்தியம்!

ஜீரணக் கோளாறுக்கு  பாட்டி வைத்தியம்!

Image

இயற்கை ஆரோக்கியம்

சுக்கு கருப்பட்டி

சுக்கு கருப்பட்டி மற்றும் நான்கு மிளகுகளை எடுத்துக் கொள்ளவும். இதை உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ளவும். இந்தப் பொடியை இரண்டு வேளை சாப்பிடுவதன் மூலம் வயிற்று வலி குணமடையும்.

சாதம் வடித்த நீர்

அஜீரணக் கோளாறை சரி செய்ய மற்றும் ஒரு எளிய வழி உள்ளது. இதற்குத் தேவையானது ஒரு டம்ளர் அளவு சாதம் வடித்த நீர் ஆகும். இதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் கலந்து பருக வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்றுத் தொந்தரவு குறையும்.

 வெந்தயம்

நெய் விட்டு வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். பின் இதனை நன்கு பொடித்து தூளாக்கிக் கொள்ளவும். இந்தத் தூளை மோரில் கலந்து குடித்து வர வயிற்று வலி சரியாகும்.

தேன்

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் ஒரு தேக்கரண்டி அளவு தேனைக் கலக்கவும். இந்த நீரை அருந்தி வர வயிற்று வலி குணமடையும்.

தண்ணீர்

வயிற்றுக் கோளாறு இருக்கும் சமயத்தில் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு தண்ணீர் பருகுவதன் மூலம் வயிற்றில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். அதனால் வயிற்று வலி சீக்கிரம் குணமாக வாய்ப்புள்ளது.

இஞ்சி சாறு

இஞ்சியை நன்கு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் சாற்றுடன் சிறிதளவு தேனைக் கலந்து கொள்ளவும். இதைப் பருகுவதன் மூலம் வயிற்றுவலி குணமடையும்.

 இளநீர்

இளநீர் அருந்துவதன் மூலமும் வயிற்று வலியைச் சரி செய்து கொள்ளலாம். இளநீர் வயிற்றைச் சுத்தப்படுத்தி வயிறு சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்கின்றது.

புதினா

புதினா தழைகளைப் பறித்துக் கொள்ளவும். இதைத் தண்ணீரில் அலசிக் கொள்ளவும். பிறகு தழைகளை நன்கு கசக்கிக் கொதி நீரில் போடவும். பிறகு இந்த நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். இதில் தேவைப்பட்டால் எலுமிச்சைபழச் சாற்றையோ அல்லது தேனையோ கலந்து பருகலாம்.இந்த நீரை அருந்தி வர வயிற்று வலி குணமாகும்.

 கற்றாழை

கற்றாழை சாற்றைப் பருகுவதன் மூலம் மலச்சிக்கல் குணம் அடையும். இந்த சற்று வழவழ தன்மையுடன் இருப்பதால் மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ளவும். இதை ஒரு டேபிள் ஸ்பூன் என்ற அளவில் மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது.

 செம்பருத்தி

செம்பருத்தி இலைகளைக் காய வைத்து தூள் செய்து காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளைகளில் எடுத்துக்கொள்ளலாம். இதுவும் நிவாரணம் அடைய உதவும்.

 வெற்றிலை

வெற்றிலை மற்றும் 4 மிளகுகளைச் சேர்த்து உண்பதால் வயிற்று வலி குணமடையும். இது சற்று காரத் தன்னையோடு இருந்தாலும் நல்ல பலம் கிட்டும். வெற்றிலையோடு கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் வயிற்றுப் போக்கு தொந்தரவு குணம் ஆகும்.

மிளகு ரசம்

மிளகு ரசம் வைத்து அருந்துவதாலும் வயிற்றுவலி குணமாகும். மிளகு மிகவும் மருத்துவக் குணம் வாய்ந்தது. உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் அகற்றும் வல்லமை இந்த மிளகிற்கு உண்டு. இது வயிற்று வலியைக் குணப்படுத்த உதவும்.

 ஓமம்

ஓமத்தை நீரில் போட்டுக் காய்ச்சிக் கொள்ளவும். இந்த நீரை வடித்து எடுத்துப் பருகி வர வயிற்று வலி பூரண குணமடையும். ஓமம் ஒரு சிறந்த மருந்து வயிற்று வலி நிவாரணி என்பது குறிப்பிடத் தகுந்தது.

 எலுமிச்சை பழச்சாறு

வயிற்றில் உள்ள கோளாறை சரி செய்ய எலுமிச்சம் பழச்சாறு உதவுகின்றது. எலுமிச்சம் பழச்சாற்றை எளிய முறையில் தயாரித்துக் கொள்ளலாம். இந்த எலுமிச்சை பழச் சாறு வயிற்றுப் போக்கை உடனே கட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை கொண்டது.

பெருங்காயத்தூள்

இந்த பெருங்காயத் தூள் வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.
சுடு நீரில் ஒரு டீஸ்பூன் பெருங்காயத் தூளைக் கலந்து பருகுவதன் மூலம் வயிற்றுக் கோளாறை சரி செய்து கொள்ளலாம். அல்லது பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் என்ற விதத்தில் செய்து எடுத்துக்கொண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வர அஜீரணத்தால் உண்டான பிரச்சினைகள் தீரும். மோரில் அரை டீஸ்பூன் பெருங்காயத் தூளை கலந்து பருகி வந்தாலும் வாயுத்தொல்லை பூரணமாகக் குணம் அடையும்.

Leave a Comment