மாமியாருக்கு நல்ல யோகமடா…

Image

ஜோக் கேட்டு சிரிங்கப்பூ

நீதிபதி : உன் பேர் சொல்லு, எதுக்காக உன் உயிர் நண்பனை கொலை செஞ்சே, எதை வைச்சு கொலை செஞ்ச, உனக்கு மனசாட்சி இல்லையா?

கைதி : இப்படித்தான் கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தான் எஜமான்.

…………………..

நீதிபதி : ஒரே ராத்திரியில மூணு வீட்ல கொள்ளை அடிச்சிருக்கே. எப்படி அது உன்னால முடிஞ்சது..?

கைதி : தொழில் ரகசியம் எல்லாம் வெளியே சொல்ல மாட்டேங்க.

…………………………

அவர் : நேத்து ராத்திரி பயங்கரமா திட்டிக்கிட்டே இருந்தீங்களே… யாரை..?

இவர் : என் பொண்டாட்டியைத்தான்.

அவர் : அவங்கதான் ஊருக்குப் போயிட்டாங்களே..

இவர் : இந்த நேரத்துலதான சார் திட்ட முடியும்.

………………….

அம்மா : மகனே, அப்பாவுக்கு ஒரு பொண்ணு பிடிச்சிருக்காம், அவளைத்தான் நீ கல்யாணம் செய்யணும் சரியா..?

மகன் : அடப்போம்மா, அவருக்கு நம்ம வேலைக்காரியைத்தான் ரொம்பவும் பிடிக்கும். நான் மாட்டேம்மா.

……………………………

மாமியார் : என் மருமக ரொம்பவும் ஃபாஸ்ட்..

இவள் : அப்படியா..?

மாமியார் : பின்னே, எனக்கு உடம்பு சரியில்லைன்னுதான் சொன்னேன், உடனே  இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செஞ்சிட்டா

……………………………..

Leave a Comment