மக்களுக்குப் பரிசு, மாணவர்களுக்குப் பரிசு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 325

மேயர் சைதை துரைசாமி எந்தவொரு நடவடிக்கையைக் கையில் எடுத்தாலும், அதில் ஒரு தனித்தன்மையும் புதுமையும் இருக்கும். பொதுமக்கள் குப்பைகளைப் பிரித்துத் தர வேண்டும் என்று நேரடியாக வலியுறுத்துவதும், பாடம் எடுப்பதும் மட்டும் போதாது, அதையும் தாண்டி மக்களே இந்த விஷயத்தை முன்னின்று செய்வதற்கு விருப்பம் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இதையடுத்து, ஒவ்வொரு தெருவிலும் பிளாஸ்டிக் பொருட்களைத் தரம் பிரித்து கையாள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு வார்டிலும் குலுக்கல் முறையில் தங்கக் காசு வழங்கும் திட்டம் ஒன்றை மேயர் சைதை துரைசாமி அறிமுகம் செய்தார். குப்பையை எப்படி பிரிப்பது, எந்த வகையில் கொடுப்பது என்று இதையடுத்து குடும்பத் தலைவிகள் ஆர்வமுடன் குப்பைகளைப் பிரித்துக் கொடுப்பதற்கு முன்வந்தனர்.

இதே நேரத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பிளாஸ்டிக் குப்பை பிரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தார். இந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த விஷயத்தில் பொதுநலச் சங்கங்களை அதிகம் ஈடுபடுத்துவதற்குத் திட்டமிட்டார். ஏனென்றால், சுகாதாரத்தை அந்தந்த பகுதி மக்களே கையில் எடுத்துக்கொண்டால் மட்டுமே, குப்பை மேலாண்மை எளிதாக இருக்கும் என்று முடிவெடுத்தார். இந்த வகையில் நிறைய பொதுநலச் சங்கங்கள் ஆர்வமுடன் இந்த விஷயத்தில் மேயர் சைதை துரைசாமிக்குக் கை கொடுத்தன.

மாணவர்களுக்கும் மாணவர்களுக்கும் பரிசுகள் கொடுத்து குப்பை பிரிப்பை மேயர் சைதை துரைசாமி ஊக்குவித்தாலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. இரண்டு குப்பைத் தொட்டி, சரியான நேரத்தில் குப்பை ஒப்படைப்பு போன்றவைகளை கடைப்பிடிப்பது பெரும் சவாலாகவே இருந்தன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment