நான்காவது ஆண்டில் ஞானகுரு மகிழ்ச்சி

Image

பேரன்புக்கு நன்றி

ஞானகுரு பதிப்பகம் சார்பில் நடத்தப்படும் மகிழ்ச்சி மின்னிதழ் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

மனிதருக்கு இன்றைய சூழலில் எல்லாமே கிடைக்கிறது என்றாலும் எதுவுமே இல்லை என்ற மனநிலையில் கவலைப்படுகிறார்கள். ஆகவே, மனிதருக்கு உண்மையான தேவை எது, எதற்கு முன்னுருமை கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டதே ஞானகுரு மகிழ்ச்சி. சுருக்கமாகச் சொல்வது என்றால் ஆரோக்கியமான உடல், நிம்மதியான மனம், போதிய அளவுக்குப் பணம், ஆறுதல் அளிக்கும் வகையில் உறவுகள் ஆகிய நான்கும் கிடைப்பதற்கு வழிகாட்டுவதே ஞானகுரு.

பிறர் முன்பு நன்றாக வாழவேண்டும், பிறரைப் போன்று வாழ வேண்டும் என்பதே நிறைய பேரின் சிக்கலுக்குக் காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை மிக்கவர். ஆகவே, தங்களுக்காக வாழ்ந்தால் போதும் என்பதே சரியான வழி.

இந்த நான்காவது இதழில் எக்கச்சக்க தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதழில் முன்னோட்டம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. காத்திருங்கள். விரைவில் வருகிறது ஞானகுரு மகிழ்ச்சி தை மாத மின்னிதழ்.

சந்தா விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இணைந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கு சந்தாவை பரிசாக வழங்குங்கள்.

படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

Leave a Comment