நேசிப்பவர்களுக்கு புத்தகம் பரிசாகக் கொடுங்கள்.

இது செலவல்ல, முதலீடு

பயணம் செய்யாமலே உலகை சுற்றிப்பார்க்க விரும்புபவர்களுக்கு புத்தகமே சரியான வழி. ஒவ்வொரு புத்தகமும் ஒரு புதிய சிந்தனையை விதைக்கிறது. புத்தகங்கள் அறிவைத் தருகின்றன. சில புத்தகங்கள் ஆறுதலைத் தருகின்றன; சில புத்தகங்கள் நம்மையே நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

புத்தகம் படிப்பதால் கிடைக்கும் 10 அற்புதமான நன்மைகள்

1. அறிவு வளர்ச்சி: மற்றவர்கள் பல ஆண்டுகள் அனுபவித்த பாடங்களை, சில மணி நேரங்களில் நாம் கற்றுக்கொள்ளலாம்.

2. சிந்திக்கும் திறன்: எதையும் மேலோட்டமாகப் பார்க்காமல், ஆழமாகச் சிந்திக்கும் பழக்கம் உருவாகும்.

3. மன அமைதி: வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி, அன்றாடப் பதற்றத்திலிருந்து சிறிது நேரம் விடுவிக்கிறது.

4. மொழித்திறன்: புதிய சொற்கள், அழகான வாக்கியங்கள், தெளிவான பேச்சு ஆகியவை இயல்பாக வளர்கின்றன.

5. நினைவாற்றல்: கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், கருத்துகளை நினைவில் வைத்துக்கொள்வது மூளைக்குப் பயிற்சியாக அமைகிறது.

6. கற்பனைத் திறன்: படிக்கும்போது நம் மனமே காட்சிகளை உருவாக்குகிறது. இது படைப்பாற்றலை வளர்க்கிறது.

7. முடிவெடுக்கும் திறன்: பல மனிதர்களின் அனுபவங்களையும் தவறுகளையும் அறிந்துகொள்வதால் வாழ்க்கை முடிவுகளைச் சிறப்பாக எடுக்க உதவுகிறது.

8. பிறரைப் புரிந்துகொள்ளும் திறன்: வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கையைப் படிப்பதால் அவர்களின் உணர்வுகளையும் வலிகளையும் புரிந்துகொள்ள முடிகிறது.

9. தன்னம்பிக்கை: புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது நம்மீது நம்பிக்கையை அதிகரிக்கிறது.

10. வாழ்க்கையை மாற்றும் சக்தி: ஒரு நல்ல புத்தகத்தின் ஒரு கருத்து, நம்முடைய பல ஆண்டுகால தவறான சிந்தனையைக்கூட மாற்றிவிடலாம்.

மாணவர்கள், உறவுகள், நண்பர்களுக்கு பரிசாக வழங்குவதற்கான புத்தகங்கள் ஞானகுரு பதிப்பகத்தில் கிடைக்கின்றன. மனவள ஆலோசகர் எஸ்.கே.முருகன் எழுதிய புத்தகங்களை வாங்கி படியுங்கள். பிறருக்கு பரிசளித்து மகிழுங்கள்.

  • எளிய தமிழில் சித்தர் தத்துவம்

மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்கு சித்தர் பாடல்கள் நம்பிக்கை தருகின்றன. இந்த பொக்கிஷத்தில் ஒளிந்திருக்கும் வாழ்க்கை ரகசியங்கள்.

விலை ரூ.250

உங்கள் பிள்ளையும் ஜீனியஸ் ஆகலாம்

எல்லா பிள்ளைகளும் இயற்கை வைரம் போன்றவர்கள். அவர்களை ஜொலிக்க வைப்பதற்கு பெற்றோர், ஆசிரியர்களுக்கான உளவியல் வழிகாட்டி

விலை ரு.300

  • ஞானகுரு

ஆரோக்கிய உடல், நிம்மதியான மனம், போதிய பணம், ஆறுதலான உறவுகள் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைவதற்கு வழிகாட்டும் சித்தரின் பயணம்.

விலை ரூ.400

  • வாழ்வைப் புரட்டும் மந்திரம்

திறமையுடன் முயற்சி, பயிற்சியுடன் பொறுமையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதைச் சொல்லும் 30 பிரபலங்களின் சக்சஸ் ஸ்டோரி.  

விலை : ரூபாய் 350

  • உயிர்த்துணை

வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியான தம்பதியராக வாழ்வதற்கு உளவியல் ஆலோசனைகள். திருமணத் தம்பதியருக்கு பரிசளிப்பதற்கு ஏற்ற புத்தகம்.  

விலை   : ரூபாய் 200

  • நெருப்பு

இவள் பெண் அல்ல. ஆணும் அல்ல. சிகண்டியாக மாறிய அம்பையின் சரிதம். புத்தம் புதிய பார்வை, புதிய கோணத்தில் எழுதப்பட்ட மகாபாரதம் இதிகாச நாவல்

விலை ரூ.250

  • இன்று முதல் ஹேப்பி

மனசு பாதி, மருந்து பாதி. நோய் பாதிக்கும் நேரத்தில் மருந்துடன் சேர்த்து நம்பிக்கை வளர்த்துக்கொண்டு அச்சம் தவிர்க்கும் உளவியல் வழிகள் 

விலை   : ரூ.250

  • ஆத்மலோகம்

ஆவி என்பது விசித்திர நம்பிக்கை. ஆத்மலோகத்தின் பணயக் கைதியாகும் சிறுவன் ஆவியின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் குடும்பத்தின் ரத்தப் புதினம்.   

விலை  : ரூ.250

  • உலகை உலுக்கிய 75 திரைப்படங்கள் – எம்.நிர்மல்

நாடு, இனம், மொழி, மதம், ஜாதி எல்லைக்கோடுகளைக் கடந்து ஒட்டுமொத்த உலக மக்களையும் கவர்ந்த அட்டகாசமான திரைப்படங்களின் அறிமுகம்

விலை ரூ.600

புத்தக விலையுடன் தபால் செலவு ரூ.60 சேர்த்து 80725 89355 செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். வங்கிக் கணக்கிலும் பணம் அனுப்பலாம்.

GYANAGURU PUBLICATION, UNION BANK OF INDIA, IFS CODE : UBIN0554847, Current Account No. 548401010050639

நேரில் வாங்குவதற்கு : ஞானகுரு பதிப்பகம், ஜி2, கோவிந்த் அபார்ட்மென்ட், 6 ஏஜிஎஸ் காலனி 4வது குறுக்குத்தெரு, கொட்டிவாக்கம், சென்னை – 600041.

Leave a Comment